பிரதமர் அலுவலகம்

இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டமான யசோபூமியை புதுதில்லியில் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான 'பி.எம் விஸ்வகர்மா' திட்டம் அறிமுகம்

பிரதமர் விஸ்வகர்மா லோகோ, 'சம்மான் சமர்த்ய சம்ரிதி' மற்றும் போர்ட்டல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்

தனிப்பயனாக்கப்பட்ட முத்திரைத் தாள் மற்றும் உபகரண கையேட்டை வெளியிட்டார்

18 பயனாளிகளுக்கு விஸ்வகர்மா சான்றிதழ் வழங்கப்பட்டது

நாட்டின் ஒவ்வொரு தொழிலாளிக்கும், ஒவ்வொரு விஸ்வகர்மாவுக்கும் 'யசோபூமி'யை அர்ப்பணிக்கிறேன்.

"விஸ்வகர்மாக்களை அங்கீகரித்து ஆதரிப்பது காலத்தின் தேவை"

"அவுட்சோர்சிங் வேலை எங்கள் விஸ்வகர்மா நண்பர்களுக்கு வர வேண்டும், அவர்கள் உலகளாவிய விநியோக சங்கிலியின் ஒரு முக்கிய பகுதியாக மாற வேண்டும்"

"இந்த மாறிவரும் காலங்களில், விஸ்வகர்மா நண்பர்களுக்கு பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் முக்கியமானவை"

"தங்களைப் பற்றி கவலைப்பட யாரும் இல்லாதவர்களுக்காக மோடி நிற்கிறார்"

"உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுத்தல் என்பது முழு நாட்டின் பொறுப்பு"

இன்றைய வளர்ந்த பாரதம்

Posted On: 17 SEP 2023 3:01PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள துவாரகாவில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டமான 'யசோபூமி'யை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். 'யசோபூமி' ஒரு அற்புதமான மாநாட்டு மையம், பல கண்காட்சி அரங்குகள் மற்றும் பிற வசதிகளைக் கொண்டுள்ளது. விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான 'பி.எம் விஸ்வகர்மா திட்டத்தை' அவர் தொடங்கி வைத்தார். பிரதமர் விஸ்வகர்மா லோகோ, டேக்லைன் மற்றும் போர்ட்டலையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தனிப்பயனாக்கப்பட்ட முத்திரைத் தாள், உபகரண  கையேடு மற்றும் வீடியோவையும் அவர் வெளியிட்டார். 18 பயனாளிகளுக்கு விஸ்வகர்மா சான்றிதழ்களை பிரதமர் வழங்கினார்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர், குரு-சிஷ்ய பரம்பரை மற்றும் புதிய தொழில்நுட்பம் ஆகிய கண்காட்சிகளை பார்வையிட்டார். யசோபூமியின் முப்பரிமாண மாடலையும் அவர் ஆய்வு செய்தார். முன்னதாக, தில்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையை துவாரகா செக்டர் 21 முதல் புதிய மெட்ரோ நிலையம் 'யசோபூமி துவாரகா செக்டர் 25' வரையிலான சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இது பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். நாடு முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான விஸ்வகர்மாக்களுடன் இணைவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்கண்காட்சியை பார்வையிட்டு, கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுடன் கலந்துரையாடிய சிறந்த அனுபவத்தையும் அவர் எடுத்துரைத்தார். பொதுமக்கள் இந்த நிகழ்வை பார்வையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். லட்சக்கணக்கான கைவினைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா திட்டம் ஒரு நம்பிக்கை ஒளியாக வருகிறது என்று பிரதமர் கூறினார்.

சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் - 'யசோபூமி' தொடர்பாக, இந்த அற்புதமான வசதியை நிர்மாணிப்பதில் தொழிலாளர்கள் மற்றும் விஸ்வகர்மாக்களின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். "இன்று நான் நாட்டின் ஒவ்வொரு தொழிலாளிக்கும், ஒவ்வொரு விஸ்வகர்மாவுக்கும் 'யசோபூமி'யை அர்ப்பணிக்கிறேன்", என்று அவர் கூறினார். இன்றைய நிகழ்ச்சியுடன் தொடர்புடைய விஸ்வகர்மாக்களிடம் பேசிய அவர், 'யசோபூமி' அவர்களின் படைப்புகளை உலக மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் இணைக்கும் துடிப்பான மையமாக இருக்கும் என்று கூறினார்.

நாட்டின் அன்றாட வாழ்க்கையில் விஸ்வகர்மாக்களின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவத்தை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். தொழில்நுட்பத்தில் என்னதான் முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், விஸ்வகர்மாக்கள் சமூகத்தில் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். விஸ்வகர்மாக்களை அங்கீகரித்து ஆதரிப்பது காலத்தின் தேவை என்றார்.

"விஸ்வகர்மாக்களின் மரியாதையை உயர்த்துவதற்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும், செழிப்பை வளர்ப்பதற்கும் அரசாங்கம் ஒரு நண்பனாக முன்வந்துள்ளது" என்று திரு மோடி குறிப்பிட்டார். கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் 18 கவனம் செலுத்தும் பகுதிகளை விளக்கிய பிரதமர், தச்சர்கள், கொல்லர்கள், பொற்கொல்லர்கள், சிற்பிகள், மண்பாண்ட தொழிலாளர்கள், காலணிகள் தைப்பவர்கள், தையல்காரர்கள், கொத்தனார்கள், சிகையலங்காரத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் போன்றோர் பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அதற்கான செலவு ரூ.13,000 கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது கைவினைஞர்களுடன் பேசியபோது தனது தனிப்பட்ட அனுபவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், கையால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான அதிகரித்து வரும் தேவையை எடுத்துரைத்தார். உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் தங்கள் வேலையை சிறு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன என்று அவர் கூறினார். "இந்த அவுட்சோர்சிங் வேலை எங்கள் விஸ்வகர்மா நண்பர்களுக்கு வர வேண்டும், அவர்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக மாற வேண்டும், இதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதனால்தான் இந்தத் திட்டம் விஸ்வகர்மா நண்பர்களை நவீன யுகத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு முயற்சியாகும்", என்று பிரதமர் கூறினார்.

"இந்த மாறிவரும் காலங்களில், விஷ்வகர்மா நண்பர்களுக்கு பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் முக்கியமானவை" என்று கூறிய பிரதமர், திறமையான கைவினைஞர்கள் மற்றும் தொழில்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். பயிற்சிக்  காலங்களில் விஸ்வகர்மா நண்பர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். நவீன உபகரண பெட்டிக்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள   வவுச்சரும் வழங்கப்படும் என்றும், தயாரிப்புகளின் பிராண்டிங், பேக்கேஜிங் மற்றும் சந்தைப்படுத்தலுக்கு அரசாங்கம் உதவும் என்றும் அவர் கூறினார். ஜி.எஸ்.டி பதிவு செய்யப்பட்ட