பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 15 என அறிவிக்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 13 SEP 2023 11:49AM by PIB Chennai

நமது குழந்தைகளின் ஆற்றல்உறுதிப்பாடுதிறன் மற்றும் உற்சாகத்தைக் கொண்டாட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் பிரதமரின் தேசிய பால  புரஸ்கார் (பி.எம்.ஆர்.பி.பி) விருதுகளை வழங்கி வருகிறது.

இந்தியாவில் வசிக்கும் இந்தியக் குடியுரிமை உள்ள 18 வயதுக்கு மிகாத எந்தவொரு குழந்தைகளும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது அவர்களுக்காக மற்றவர்கள் பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை தேசிய விருதுகள் இணைய தளமான  https://awards.gov.in  என்ற தளத்தில்  15.09.2023-க்குள் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

***

AP/ANU/PLM/RS/GK


(வெளியீட்டு அடையாள எண்: 1956934) வருகையாளர் எண்ணிக்கை : 192