பிரதமர் அலுவலகம்

துருக்கி அதிபருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 10 SEP 2023 8:03PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (10-09-2023) புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது துருக்கி அதிபர் திரு ரெசெப் தயிப் எர்டோகனுடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார்.

 

வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

 

இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்துக்காக துருக்கி அதிபர் திரு எர்டோகன் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். 2023 பிப்ரவரியில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு ஆபரேஷன் தோஸ்த் என்ற இயக்கத்தின் கீழ் உடனடி உதவிகளை வழங்கியதற்காக இந்தியாவுக்கு துருக்கி அதிபர் நன்றி தெரிவித்தார்.

 

சந்திரயான் திட்டத்தின் வெற்றிக்காக திரு எர்டோகன் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா திட்டத்துக்காகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 

***

ANU/SM/PLM/DL



(Release ID: 1956170) Visitor Counter : 124