மத்திய அமைச்சரவை

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம், 2017 இன் கீழ் கூடுதல் நிதித் தேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 SEP 2023 3:48PM by PIB Chennai

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கான தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம் 2017-க்கு ரூ.1164.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கான தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம், 2017-2018 ஏப்ரல் 23, 2018 தேதியிட்ட அறிவிக்கை எண் 2 (2) / 2018-எஸ்பிஎஸ் மூலம் மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.131.90 கோடியாகும். ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 2021-22 நிதியாண்டில் செலவழிக்கப்பட்டது. மேலும், 2028-2029 ஆம் ஆண்டு வரை உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற கூடுதல் நிதித் தேவை ரூ.1,164.53 கோடியாகும். இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை ஒதுக்க, தொழில் வளர்ச்சித் திட்டம், 2017ன் கீழ், அமைச்சரவையின் ஒப்புதல் கோரப்பட்டது.

கடன் அணுகலுக்கான மத்திய மூலதன முதலீட்டு ஊக்கத்தொகை:

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராண்ட் மாநிலங்களில் அமைந்துள்ள உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் கணிசமான அளவில் விரிவடைந்துள்ள அனைத்து தகுதிவாய்ந்த புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள தொழில் நிறுவனங்களுக்கு, ஆலை மற்றும் இயந்திரங்களுக்கான முதலீட்டில் 30% மத்திய மூலதன முதலீட்டு ஊக்கத்தொகை ரூ.5.00 கோடி என்ற உச்ச வரம்புடன் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1955110

---

ANU/AD/IR/KPG/GK



(Release ID: 1955162) Visitor Counter : 157