விவசாயத்துறை அமைச்சகம்

வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை, ஹைதராபாத்தில் ஒருங்கிணைத்துள்ள பருவநிலைக்கு ஏற்ற விவசாயம் குறித்த G20 தொழில்நுட்பப் பட்டறை 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது

Posted On: 04 SEP 2023 5:02PM by PIB Chennai

வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை (DARE), வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், காலநிலையை எதிர்கொள்ளும் வேளாண்மை குறித்த G20 தொழில்நுட்பப் பட்டறை செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

காலநிலை மாற்றத்தின் சவால்களை விவாதிக்கவும் முன்னிலைப்படுத்தவும் உலகெங்கிலும் உள்ள நிபுணர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த பட்டறை பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் நாடுகளின் திறன்கள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை வலியுறுத்துகிறது.

 

விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திருமதி ஷோபா கரந்த்லாஜே அவர்கள் கலந்து கொண்ட தொடக்க அமர்வுடன் மூன்று நாள் நிகழ்வு 4ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் "காலநிலையை தாங்கும் விவசாய ஆராய்ச்சி தேவைகள் மற்றும் கண்டுபிடிப்புகள்" குறித்து கவனம் செலுத்தப்பட்டது, இதில் பங்கேற்று பேசிய பேச்சாளர்கள், தங்கள் நாடுகளில் விவசாயத்தில் நேரிட்ட பின்னடைவையும் அதனை எதிர்கொண்ட விதம் குறித்தும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

 

விவசாய உணவு முறைகளில் உள்ள நிச்சயமற்ற தன்மையைக் குறைக்க, வளர்ந்து வரும் இந்த சவால்களை எதிர்கொள்ளத் தேவையான அறிவியல் மற்றும் புதுமையான தீர்வுகளையும் அவர்கள் பட்டியலிட்டனர். இந்நிகழ்ச்சியில் G20 உறுப்பு நாடுகள், விருந்தினர்கள் அழைக்கப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் (IOs) வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். வேளாண்மை அமைச்சகம் மற்றும் பிற அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திருமதி ஷோபா கரந்த்லாஜே பேசுகையில், விவசாயம் மிகவும் உணர்திறன் வாய்ந்த துறை என்றும், ஜி 20 நாடுகளில் ஏற்கனவே நடக்கும் காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நாம் அனைவரும் ஏற்கனவே அனுபவித்து வருகிறோம் என்றும், இந்தப் பயிலரங்கில் இருந்து வெளிவரும் பரிந்துரைகள், காலநிலையை எதிர்க்கும் விவசாயத்தை அடைவதற்கு வழிகாட்டும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

 

வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை மற்றும் டிஜி ஐசிஏஆர் டாக்டர். ஹிமான்ஷு பதக் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்று பேசினர்.

****

(Release ID: 1954600)

ANU/SM/BS/KRS



(Release ID: 1954763) Visitor Counter : 116