மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

புதுதில்லியில் நடைபெறும்18 வது ஜி 20 உச்சி மாநாட்டின் முக்கிய ஈர்ப்பு டிஜிட்டல் இந்தியா அனுபவ மண்டலம்

Posted On: 04 SEP 2023 3:49PM by PIB Chennai

ஒரு வரலாற்று முன்னெடுப்பில், இந்தியாவின் தலைமையின் கீழ், எதிர்கால டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (டிபிஐ) எவ்வாறு திறம்பட வடிவமைப்பது என்பது குறித்து ஜி 20 ஒருமித்த கருத்தை எட்டியது.

இலகுவான வாழ்க்கைக்காக டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் மகிழ்ச்சியான பயன்பாட்டை பிரதிநிதிகள் அனுபவிக்கலாம்.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளான  ஆதார், (யுபிஐ) ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம், டிஜிலாக்கர், டிக்ஷா, பாஷினி, ஓ.என்.டி.சி, இ-சஞ்சீவனி போன்றவை ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான தாக்கத்தை நிரூபிக்கும்.

டிஜிட்டல் மாற்றத்தின் வெற்றிகளை வெளிப்படுத்தும் டிஜிட்டல் இந்தியா பயணம்.

அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகங்களிடையே ஆண்டு முழுவதும் நடைபெற்ற அனைத்து ஜி 20 செயல்முறைகள் மற்றும் கூட்டங்களின் உச்சமாக 18வது ஜி 20 அரசுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் உச்சிமாநாட்டை நடத்த புதுதில்லி தயாராக உள்ளது. புது தில்லி உச்சிமாநாட்டின் முடிவில் ஜி 20 தலைவர்களின் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்படும், இது அந்தந்த அமைச்சர்கள் மற்றும் பணிக்குழு கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட முன்னுரிமைகள் குறித்த தலைவர்களின் உறுதிப்பாட்டைக் குறிப்பதாக இருக்கும். ஜி-20 மாநாடு செப்டம்பர் 9-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது.

ஜி20 டிஜிட்டல் பொருளாதார பணிக்குழுவின் (டி.இ.டபிள்யூ.ஜி) கூட்டங்களை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் லக்னோ, ஹைதராபாத், புனே மற்றும் பெங்களூருவில் வெற்றிகரமாக நடைபெற்றது. இது பெங்களூருவில் ஜி 20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்களின் கூட்டத்துடன் முடிவடைந்தது. இந்த கூட்டங்களின் முக்கிய முடிவுகள் மற்றும் வழங்கல்கள் பின்வருமாறு:

• டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, எல்.எம்.ஐ.சி.களில் டி.பி.ஐ.க்களுக்கு நிதியளிப்பதற்கான ஒரு எதிர்கால கூட்டணி, உலகளாவிய டிபிஐ களஞ்சியம், வணிகங்களை ஆதரிப்பதற்கான உயர்மட்ட கொள்கைகள், டிஜிட்டல் திறன்களை நாடு கடந்த ஒப்பீட்டை எளிதாக்குவதற்கான வரைபடம், டிஜிட்டல் திறன் மற்றும் மறுதிறன் திட்டங்களை வடிவமைத்து அறிமுகப்படுத்துவதற்கான கருவித்தொகுப்பு, டிஜிட்டல் திறன் கொண்ட திறமைகளை ஊக்குவிக்கும் மெய்நிகர் சிறப்பு மையம் போன்ற அத்தியாவசிய அம்சங்களை உள்ளடக்கிய இந்தியா தலைமையிலான விநியோகங்களில் ஜி20 ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

• 'டிபிஐ மூலம் எஸ்டிஜி-களை துரிதப்படுத்துதல்' மற்றும் யுஎன்டிபி உடன் இணைந்து ஜி20 இந்திய பிரசிடென்சியின் டிபிஐ ப்ளே புக் (‘DPI Playbook’) என்ற பெயரில் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் நாடுகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு அறிவுசார் தயாரிப்புகளின் வெளியீடு.

• கணிசமான மக்கள் தொகை அளவில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளின் போர்ட்ஃபோலியோவான இந்தியா ஸ்டாக் உடன் இணைந்து மற்றும் பகிர்வது குறித்து ஆறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

புதுதில்லியில் நடைபெறும் 18 வது ஜி 20 உச்சிமாநாட்டில் டிஜிட்டல் இந்தியா அனுபவ மண்டலம் ஒரு முக்கிய ஈர்ப்பாக அமைக்கப்படுகிறது, மேலும் இது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் குறிப்பிடத்தக்க மக்கள் தொகை அளவில் இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட டிஜிட்டல் உருமாற்றத்தின் வெற்றி குறித்து ஜி 20 பிரதிநிதிகளுக்கு நேரடி அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா அனுபவ மண்டலம் மற்றும் சர்வதேச ஊடக மையம்.

நாட்டில் டி.பி.ஐ.க்களை செயல்படுத்துவதில் அனுபவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதை எளிதாக்குவதற்கும், அளவிடக்கூடிய மற்றும் பிரதிபலிக்கக்கூடிய திட்டங்களைப் பற்றி உலகளாவிய பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பார்வையாளர்களுக்கு தொழில்நுட்பத்தின் சக்தியை நேரடியாக அனுபவிக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குவதற்கும், பிரகதி மைதானத்தில் அரங்கு 4 மற்றும் ஹால் 14 இல் இரண்டு அதிநவீன டிஜிட்டல் இந்தியா அனுபவ மண்டலங்களை மத்திய அரசு நிறுவுகிறது.

இந்த கண்காட்சியின் பின்னணியில் உள்ள நெறிமுறைகள் உலகத்தரம் வாய்ந்த முன்முயற்சிகளை வெளிப்படுத்துவதாகும்:

இலகுவான வாழ்க்கை

வணிகம் செய்வதை இலகுவாக்குதல்

நிர்வாகத்தை இலகுவாக்குதல்

டிஜிட்டல் இந்தியா அனுபவ மண்டலம் என்பது அதிநவீன தொழில்நுட்பத்தின் பொக்கிஷமாகும், இது டிஜிட்டல் இந்தியாவின் முக்கியமான முன்முயற்சிகள் குறித்த அறிவு மற்றும் நுண்ணறிவுகளால் நிரம்பியுள்ளது. ஆதார், டிஜிலாக்கர், யுபிஐ, இ-சஞ்சீவனி, திக்ஷா, பாஷினி மற்றும் ஓஎன்டிசி ஆகிய டிபிஐக்களை செயல்படுத்துவதில் சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்த ஏழு முக்கிய முன்முயற்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இக்கண்காட்சி ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்கும், இது பார்வையாளர்கள் இந்தியாவில் உள்ள டிபிஐ களஞ்சியங்களை ஆராயவும், உலகளாவிய சமூகத்தின் மேம்பாட்டிற்கான நுண்ணறிவுகளைப் பெறவும் உதவும்.

ஆதார் முக அங்கீகார மென்பொருளின் நேரடி செயல்விளக்கங்கள் மூலம், பங்கேற்பாளர்கள் நேரடி அனுபவத்தைப் பெறுவதற்கும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொடர்புகொள்வதற்கும் வாய்ப்பு உள்ளது, அதே நேரத்தில் யுபிஐ கண்காட்சி, பார்வையாளர்கள் உலகெங்கிலும் உள்ள யுபிஐயின் பல்வேறு பயன்பாடுகளை ஆராய்ந்து கண்டறிய உதவும். மேலும், பார்வையாளர்கள் க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்து பொருட்களை வாங்கலாம் மற்றும் பெயரளவு கட்டணத்துடன் தடையற்ற பரிவர்த்தனைகளைத் தொடங்கலாம்.

கல்வி, நிதி மற்றும் வங்கி, பயணம், போக்குவரத்து, ரியல் எஸ்டேட், சட்டம் மற்றும் நீதித்துறை போன்ற துறைகளில் செயல்முறைகளை நெறிப்படுத்துவதிலும் செயல்திறனை மேம்படுத்துவதிலும் அதன் பங்கைக் காண்பிப்பதன் மூலம் இந்தியாவின் டிஜிலாக்கரின் நடைமுறை பயன்பாட்டைப் பற்றியும் விருந்தினர்கள் அறிந்து கொள்ளலாம்.

இ-சஞ்சீவனி கண்காட்சியின் சிறப்பம்சமாகஇதயவியல், மனநலம், கண் மருத்தும் மற்றும் பொது மருத்துவம் ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆன்லைன் ஆலோசனையை வழங்கவும், பார்வையாளர்களுக்கு நிகழ்நேர சுகாதார பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைகளை மின்-பரிந்துரையுடன் வழங்குவதையும் அனுபவப்பூர்வமாக அறியமுடியும்.

திக்ஷா கண்காட்சி ஒரு ஆழமான மற்றும் உள்ளுணர்வு அனுபவத்தை வழங்கும், இது பார்வையாளர்களை திக்ஷாவில் கிடைக்கும் கல்வி வளங்களின் செல்வத்தை ஆராய அனுமதிக்கும். பாஷினி கண்காட்சியில், பார்வையாளர்கள் அனைத்து இந்திய மொழிகளிலும், ஆறு ஐ.நா மொழிகளிலும் நிகழ்நேர பேச்சு மொழிபெயர்ப்பை அனுபவிக்க முடியும். மேலும் உரையாடலுக்கு வசதியாக, 'ஜுகல்பந்தி' டெலிகிராம் போட் பார்வையாளர்கள் கேள்விகளைக் கேட்கவும், அவர்கள் விரும்பும் எந்த மொழியிலும் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கும்.

டிஜிட்டல் இந்தியாவின் தனித்துவமான பயணத்தின் பிரமாண்டமான இந்த கண்காட்சி 2014 முதல் டிஜிட்டல் இந்தியாவின் முக்கிய மைல்கற்கள் வழியாக பார்வையாளர்களை அழைத்துச் செல்லும், உருவகப்படுத்தப்பட்ட மெய்நிகர் ரியாலிட்டி மூலம் டிஜிட்டல் வெளியில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களை உயிர்ப்பிக்கும் என்றாலும், பார்வையாளர்கள் டிஜிட்டல் ட்ரீ கண்காட்சியில் டிபிஐயின் முக்கிய கொள்கைகள் மற்றும் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிகளின் பரிணாம வளர்ச்சியைக் காணலாம்.

டிஜிட்டல் வர்த்தகத்திற்கான கட்டமைப்பு வெளி ( ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் -ஓ.என்.டி.சி) விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நெட்வொர்க் வழங்குநர்களுடன் பெரிய அளவில் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதைப் பயனர்கள் நேரடியாக உரையாடி கண்டறியலாம். அதே நேரத்தில் ஜி.ஐ.டி.ஏ பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் ஒரு கியோஸ்க் மரியாதைக்குரிய புனித புத்தகமான ஸ்ரீமத் பகவத் கீதையுடன் இணக்கமாக வாழ்க்கையைச் சுற்றியுள்ள கேள்விகளுக்கு பார்வையாளர்கள் பதில்களைத் தேடுவதற்கான தளத்தை வழங்கும்.

டிஜிட்டல் இந்தியா அனுபவ மண்டலம், ஊடாடும் காட்சிகள், மெய்நிகர் ரியாலிட்டி மற்றும் பல வடிவங்களில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு நிறுவலும் அதன் இலக்கு பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அர்த்தமுள்ள ஈடுபாடு மற்றும் வயதுக்கு ஏற்ற உள்ளடக்கத்தை உறுதி செய்கிறது.

****

(Release ID: 1954600)

ANU/SM/BS/KRS



(Release ID: 1954757) Visitor Counter : 160