பிரதமர் அலுவலகம்
திறமைகளை வெளிப்படுத்தவும், கலாச்சார விழாவில் பங்கேற்கவும் நாடாளுமன்ற கலாச்சார நிகழ்ச்சி ஒரு நல்ல முன்முயற்சி: பிரதமர்
प्रविष्टि तिथि:
02 SEP 2023 8:34PM by PIB Chennai
பல்வேறு நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், கலாச்சார விழாவில் பங்கேற்கவும் வாய்ப்பளிக்கும் நாடாளுமன்ற கலாச்சாரத் திட்டம் ஒரு நல்ல முன்முயற்சி என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இதில் ஈடுபட்டுள்ள பங்கேற்பாளர்களை ஊக்குவிக்குமாறு அனைவரையும் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:
நாடாளுமன்ற கலாச்சார நிகழ்ச்சி ஒரு நல்ல முன்முயற்சியாகும், இதில் பல்வேறு நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் கலாச்சார விழாவில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைக்கும். தற்போது பாஜக எம்பிக்கள் அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வில், எனது தொகுதியான காசியிலும் ஒரு பணிவான முயற்சியை மேற்கொண்டுள்ளேன். இதில் ஈடுபட்டுள்ள பங்கேற்பாளர்களை கண்டிப்பாக ஊக்குவிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
***
SM/PKV/KRS
(रिलीज़ आईडी: 1954430)
आगंतुक पटल : 178
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam