பிரதமர் அலுவலகம்
எத்தியோப்பியா குடியரசின் பிரதமருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
Posted On:
24 AUG 2023 11:27PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, எத்தியோப்பியா குடியரசின் பிரதமர் மேதகு டாக்டர் அபி அகமது அலியை ஆகஸ்ட் 24 , 2023 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் 15 வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது சந்தித்தார்.
வளர்ச்சி கூட்டாண்மை மற்றும் திறன் மேம்பாடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், விவசாயம், இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர். முக்கியமான பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பிரிக்ஸ் அமைப்பில் எத்தியோப்பியா உறுப்பினரானதற்காக பிரதமர் டாக்டர் அபி அகமதுவுக்கு திரு மோடி வாழ்த்து தெரிவித்தார். உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக பிரதமர் டாக்டர் அபி அகமதுவை அவர் பாராட்டினார்.
பிரிக்ஸ் குடும்பத்துடன் எத்தியோப்பியா இணைவதற்கு இந்தியா அளித்த ஆதரவுக்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்த டாக்டர் அபி அகமது, சந்திரயான் திட்டத்தின் வெற்றிக்காக பிரதமரை வாழ்த்தினார், இது, எத்தியோப்பியா மற்றும் உலகளாவிய தெற்கின் பெருமை மற்றும் உத்வேகத்தின் தருணம் என்று குறிப்பிட்டார்.
***
AP/BR/KPG
(Release ID: 1952111)
Visitor Counter : 171
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada