பிரதமர் அலுவலகம்

சந்திரயான் -3 குறித்த வாழ்த்து செய்திகளுக்காக உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

Posted On: 24 AUG 2023 8:51AM by PIB Chennai

சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்காக பல உலகத் தலைவர்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பதிலளித்து நன்றி தெரிவித்துள்ளார்.

பூட்டான் பிரதமருக்கு அவர் பதில் அளித்திருப்பதாவது:

“சந்திரயான் -3 பற்றிய பாராட்டு வார்த்தைகளுக்கு  பூட்டான் பிரதமர் @PMBhutan லோட்டே ஷெரிங்கிற்கு நன்றி. இந்தியாவின் விண்வெளித் திட்டம்,  உலக நலனை மேம்படுத்துவதற்கு இயன்றவற்றை எப்போதுமே செய்யும்.”

மாலத்தீவுக் குடியரசின் அதிபருக்கு பதில் அளித்து பிரதமர் கூறியதாவது:

“அதிபர் இப்ராகிம் முகமது சோலி  @ibusolih அவர்களே, உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.”

நேபாள பிரதமரின் செய்திக்கு பதில் அளித்து பிரதமர் தெரிவித்ததாவது:

“வாழ்த்துச் செய்திக்கு நன்றி @cmprachanda”.

நார்வே பிரதமருக்கு அளித்த பதிலில்  திரு மோடி கூறியதாவது:

“உண்மை தான்,  பிரதமர் @jonasgahrstore.  பூமிக்கு இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.”

ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுக்கு பதில் அளித்து பிரதமர் கூறியதாவது:

“நன்றி @HHShkMohd. இந்தியாவின் வெற்றிகள் 140 கோடி இந்தியர்களின் பலம், திறன்கள் மற்றும் உறுதியால் இயக்கப்படுகின்றன.”

ஜமைக்கா பிரதமருக்கு  அளித்த பதிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பது பின்வருமாறு:

“நல்வாழ்த்துகளுக்கு நன்றி, பிரதமர் @AndrewHolnessJM.”

மடகாஸ்கர் குடியரசின் அதிபருக்கு அளித்துள்ள பதிலில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:

“உங்கள் அற்புதமான வார்த்தைகளுக்கு நன்றி, அதிபர் @SE_Rajoelina. விண்வெளியில் இந்தியாவின் முன்னேற்றம், வரும் காலங்களில் மனித குலத்திற்கு உண்மையிலேயே பயனளிக்கும்.”

ஸ்பெயின் பிரதமருக்கு  பதிலளிக்கையில்,

“உண்மையில், அறிவியலின் சக்தியின் மூலம், அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கி இந்தியா  செயல்பட்டு வருகிறது. @sanchezcastejon வாழ்த்துகளுக்கு நன்றி”,  என்று தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவருக்கு  பிரதமர் கூறியிருப்பதாவது:

“அன்பான வார்த்தைகளுக்கு நன்றி @vonderleyen. அனைத்து மனிதகுலத்தின் நலனுக்காக இந்தியா தொடர்ந்து ஆராய்ந்து, கற்றுக்  கொண்டு, பகிர்ந்து கொள்ளும்.”

ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு  அளித்த பதிலில்,

“ஷேக் @MohamedBinZayed வாழ்த்துக்கு நன்றி. இந்த  சாதனை, இந்தியாவின் பெருமை மட்டுமல்ல, மனித முயற்சி மற்றும் விடாமுயற்சியின் கலங்கரை விளக்கமாகும். அறிவியலிலும், விண்வெளியிலும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கட்டும்.”

 

அர்மீனியா குடியரசின் பிரதமருக்கு பதில் அளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:

“உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி, பிரதமர் @NikolPashinyan.”

***

 

AD/BR/KPG

 



(Release ID: 1951643) Visitor Counter : 135