உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மத்திய ரிசர்வ் காவல்படை மையத்தில் உள்துறை அமைச்சகத்தின் மரம் நடும் இயக்கத்தின் கீழ் 4 கோடியாவது மரக்கன்றை உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நட்டுவைத்தார்

Posted On: 18 AUG 2023 4:53PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மத்திய ரிசர்வ் காவல்படைக்குழு (சிஆர்பிஎஃப்) மையத்தில், உள்துறை அமைச்சகத்தின் அகில இந்திய மரம் நடும் இயக்கத்தின் கீழ் 4 கோடியாவது மரக்கன்றை இன்று (18.08.2023) நட்டார்.

மத்திய ரிசர்வ் காவல் படையின் (சிஆர்பிஎஃப்) 8 வெவ்வேறு வளாகங்களில் ரூ.165 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட 15 கட்டடங்களையும் திரு அமித் ஷா திறந்து வைத்தார். ரூ.57 கோடி செலவில் குடியிருப்புகள் கட்டுதல், ரூ.17 கோடி செலவில் ராய்ப்பூரில் உள்ள மையத்தில் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டுதல், ரூ.16 கோடி செலவில் நிர்வாக கட்டடம், ஜோத்பூரில் நிர்வாக கட்டடம், ராய்ப்பூரில் ரூ.11 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பயிற்சி மையம் ஆகியவை இன்று திறந்துவைக்கப்பட்ட கட்டடங்களில் அடங்கும். மத்திய உள்துறை செயலாளர் மற்றும் சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப், என்எஸ்ஜி, என்டிஆர்எஃப், ஐடிபிபி, எஸ்எஸ்பி, பிஎஸ்எஃப் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றின் தலைமை இயக்குநர்கள் உட்பட பல முக்கிய அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தது உரையில், அனைத்து மத்திய ஆயுத காவல் படைகளுக்கும் இன்று ஒரு முக்கியமான நாள் என்று கூறினார். 2023 டிசம்பருக்குள், 5 கோடி மரங்களை நடுவது என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.  இன்று 4 கோடியாவது மரக்கன்று நடப்பட்டுள்ளதன் மூலம், பூமியை பசுமையாக்குவதில் மத்திய படைகளின் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும் என்று அவர் கூறினார்.   

நாட்டின் பாதுகாப்பிற்காக மிக உயர்ந்த தியாகத்தை செய்ததோடு மட்டுமல்லாமல், வீரர்களை வழிநடத்தி சிறந்த முன்னுதாரணமாக விளங்கிய, பரம்வீர் சக்ரா விருது பெற்ற லெப்டினன்ட் கர்னல் ஏ.பி.தாராபூரின் பிறந்த தினம் இன்று எ மத்திய உள்துறை அமைச்சர் கூர்ந்தார். அந்தமான்-நிக்கோபாரில் உள்ள ஒரு தீவுக்கு லெப்டினென்ட் கர்னல் ஏ.பி.தாராபூரின் பெயரைச் சூட்டியதன் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது நினைவை என்றென்றும் நிரந்தரமாக்கியுள்ளதாக திரு அமித்ஷா தெரிவித்தார்.

5 கோடி மரங்களை நடும் 'அகில இந்திய மரம் நடும் இயக்கம்' சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகமுக்கியமான அம்சம் என்று திரு அமித் ஷா கூறினார். நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதிலும்,  எல்லைகளைப் பாதுகாப்பதிலும் அனைத்து மத்திய ஆயுதப்படைகளின் பணியாளர்களும் எப்போதும் உறுதியாக உள்ளதாக அவர் கூறினார். நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, எல்லைப் பாதுகாப்பு தவிர, இப்போது மரக்கன்றுகள் நடும் இயக்கத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் இந்தப்படையினர் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  இயற்கை பேரழிவுகள் அல்லது கொவிட் -19 போன்ற எந்த ஒரு நெருக்கடியிலும் உயிரைப் பணயம் வைத்து   மக்களுக்கு பணியாற்றுவதில் மத்திய ஆயுதப்படையினர் தங்களது காட்டியுள்ளனர் என்று அவர் கூறினார்.

மரங்களை நடுவதன் மூலமே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சாத்தியம் என்று அவர் தெரிவித்தார். இன்று நடப்படும் மரக்கன்றுகள் எதிர்கால சந்ததியினருக்கு ஆக்ஸிஜனை வழங்கும் என்று அவர் தெரிவித்தார். நடப்படும் மரங்களின் ஆயுட்காலம் நீண்டதாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், அந்த மரங்கள் அரசமரம், ஆலமரம், வேம்பு, போன்ற அதிகபட்ச ஆக்ஸிஜனை வழங்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று கூறினார். இதுபோன்ற மரங்கள் 60 முதல் 100 சதவீதம் வரை ஆக்ஸிஜனை வழங்கும் எனவும், அதன் மூலம் பூமியின் சூழலைப் பாதுகாக்க பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி பல்வேறு துறைகளில் இந்தியாவை தற்சார்புள்ள நாடாக மாற்றுவதற்கு பாடுபட்டு வருவதாக திரு. அமித் ஷா தெரிவித்தார். நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் எப்போதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலுக்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தியாவை முன்னணியில் வைத்துள்ளதாக திரு அமித்ஷா குறிப்பிட்டார். சர்வதேச சூரியசக்தி கூட்டணியை பிரான்சுடன் இணைந்து இந்தியா தொடங்கியதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த கூட்டமைப்பில் தற்போது பல நாடுகள் பங்கேற்று பங்களித்து வருவதாக அவர் கூறினார். நிலையான வளர்ச்சிக்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பை அங்கீகரித்து ஐக்கிய நாடுகள் சபை 'சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்' என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளதையும் திரு அமித் ஷா சுட்டிக்காட்டினார்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைக் குறைப்பதற்கான புதிய முறைகளையும் இந்தியா கடைபிடிப்பதாக அவர் குறிப்பிட்டார். முன்பு நாட்டில் 39 சதவீத வீடுகளில் மட்டுமே கழிப்பறைகள் இருந்தன எனவும், ஆனால் இப்போது, 99.9 சதவீத வீடுகளில் கழிப்பறைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்று அவர் கூறினார். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, 20 சதவீத எத்தனால் கலப்பு, பசுமை ஹைட்ரஜன் இயக்கம், தேசிய சூரிய சக்தி இயக்கம், மேம்பட்ட எரிசக்தி செயல்திறனுக்கான தேசிய இயக்கம், நிலையான வாழ்விடத்திற்கான தேசிய இயக்கம், தேசிய நீர் இயக்கம், பசுமை இந்தியாவுக்கான தேசிய இயக்கம், இமயமலை சுற்றுச்சூழல் தேசிய இயக்கம், நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம் போன்ற முக்கியமான இயக்கங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளிப்படுத்தியுள்ளதாக திரு அமித்ஷா தெரிவித்தார்.

***

(Release ID: 1950131)

SM/PLM/AG/KRS


(Release ID: 1950234) Visitor Counter : 182