பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் சுதந்திர தின உரையை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகின்றனர்

Posted On: 15 AUG 2023 1:33PM by PIB Chennai

இன்று செங்கோட்டையில் இருந்து பிரதமர் ஆற்றிய  சுதந்திர தின உரையை பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்தியர்கள் பாராட்டியுள்ளனர். பத்ம விருது பெற்றவர்கள், கல்வியாளர்கள்,  தொழில்நுட்பம், வணிகத் தலைவர்கள், முக்கிய பெண் தொழில் வல்லுநர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.

இந்தியாவின் எம்.எஸ்.எம்.இ சமூகத்தில் 3 டி.க்கள் என்ற  மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை குறித்த பிரதமரின் கருத்துக்களை எஃப்ஐஎஸ்எம்இ பொதுச் செயலாளர் அனில் பரத்வாஜ் பாராட்டினார்.

சிஐஐ தலைமை இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி விக்சித் பாரத்தின் தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டினார்.

இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று இந்திய ஆராய்ச்சி சி.எல்.எஸ்.ஏ தலைவர் இந்திரனில் சென் குப்தா சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்திற்கு பிரதமர் இன்று அறைகூவல் விடுத்ததைச் சுட்டிக்காட்டி நம்பிக்கை தெரிவித்தார்.

தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றத்தின் தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே, இந்த மூன்று டி களும் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் எவ்வாறு உதவுகின்றன என்பது குறித்து பேசினார்.

ஐ.ஐ.டி.இ காந்தி நகர் துணைவேந்தர் ஹர்ஷத் படேல், கடந்த ஒன்பது ஆண்டுகளில் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் குறித்த பிரதமரின் செய்தி எவ்வாறு தங்களுக்கு உதவியது என்பதையும், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு விஷா மித்ராவாகஇருக்க முடியும் என்பதையும் விளக்கினார்.

ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் துணைவேந்தர் நஜ்மா அக்தரும் கூட்டு முயற்சிகளுக்கான பிரதமரின் அழைப்பை வழிமொழிந்தார்.

அர்ஜூனா விருது பெற்ற உலக சாம்பியன், , இந்திய வில்வித்தை வீரர்    அபிஷேக் வர்மா 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, பிரதமரின் ஊழலுக்கு எதிரான குறிக்கோளை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

சர்வதேச பதக்கம் வென்ற கவுரவ் ராணா, பிரதமரின் ராஷ்டிர பிரதம், எப்போதும் பிரதம் என்ற செய்தி குறித்து பேசினார்.

சர்வதேச விளையாட்டு பதக்கம் வென்ற நிஹால் சிங், ராஷ்டிர பிரதம் யோசனை குறித்து விளக்கினார்.

சர்வதேச பதக்கம் வென்ற ஜாஸ்மின் கவுர் ராஷ்டிர பிரதம் குறித்து பேசினார்.

தேசிய விளையாட்டு விருது பெற்ற அவர்தி கிரண் நாடு முதலில் என்ற எண்ணத்தை விளையாட்டில் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்வதேச பதக்கம் வென்ற பிரியா சிங், செங்கோட்டையில் இருந்து, பிரதமர் விடுத்த  செய்தியை அனைவரும் உள்வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

பத்மஸ்ரீ பாரத் பூஷண் தியாகி, விவசாயிகளுக்கு பிரதமர் வழங்கிய அங்கீகாரத்திற்கும், தேசத்தைக் கட்டமைப்பதில் அவர்களின் பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

இதேபோல், திரு வேத்வ்ரத ஆர்யாவும் சமீபத்திய முயற்சிகள் விவசாயிகளுக்கு முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளன என்று பேசினார்.

 

தேசத்தைக் கட்டமைப்பதில் பெண்களின் பங்கை எடுத்துரைத்து செங்கோட்டையில்இருந்து பிரதமர் ஆற்றிய உரை பெண்களுக்கு ஒருபுதிய சக்தியைக் கொடுத்துள்ளது என்று பிரபல நடிகை சரிதா ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.

கதக் நடனக் கலைஞரான நளினி அஸ்தானா,நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் மூலம், இளைஞர்களுக்கு சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்திற்கு ஒரு நல்ல வழிகாட்டுதலை எவ்வாறு வழங்கினார் என்பதை எடுத்துரைத்தார்.

பத்மஸ்ரீ விருது பெற்றவரும், பிரபல மகப்பேறு மருத்துவருமான டாக்டர் அல்கா கிருபளானி பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் அனைத்து பெண்கள் சார்பிலும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

கலாரி கேப்பிட்டல் நிர்வாக இயக்குநர் திருமதி வாணி கோலா, பெண்களின் மேம்பாடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக பேசியதற்காக பிரதமரை பாராட்டினார்.

பத்ம பூஷண் விருது பெற்றவரும், புகழ்பெற்ற பாடகியுமான கே.எஸ்.சித்ராபெண்கள் அதிகாரமளித்தல் குறித்த பிரதமரின் அக்கறைகள் மற்றும் பெண்களுக்கான புதிய முயற்சிகள் குறித்த தொடர்கள் குறித்த புதிய அறிவிப்புகளால் நெகிழ்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

கேப்டன் சோயா அகர்வால், விமானி (சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படும்  மிக நீளமான விமானத்தை இயக்கிய  அனைத்து பெண் ஊழியர்களின் கேப்டன்) உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் வணிக விமானிகளைக்கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார், இதன் மூலம் விமானப் போக்குவரத்துத் துறையில் மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) மாதுரி கனிட்கர், நமது நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கை வலியுறுத்துவதில் பிரதமரின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

 

***

PKV/DL


(Release ID: 1949102) Visitor Counter : 153