பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விவசாயிகளுக்கு மலிவான விலையில் யூரியா வழங்க ரூ.10 லட்சம் கோடி மானியம்: பிரதமர் திரு. நரேந்திர மோடி


ரூ.3,000 மதிப்புள்ள யூரியா மூட்டை ரூ.300-க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது: பிரதமர்

Posted On: 15 AUG 2023 1:57PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி செங்கோட்டையில் தமது சுதந்திர தின உரையில்,விவசாயிகளுக்கு யூரியா மானியமாக ரூ .10 லட்சம் கோடியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என்று கூறினார். "உலகளவில் ஒரு மூட்டைக்கு ரூ .3,000 மதிப்புள்ள யூரியாவை விவசாயிகளுக்கு ஒரு மூட்டைக்கு ரூ .300 என்ற மலிவான விலையில் வழங்க, அரசாங்கம் யூரியா மானியமாக ரூ .10 லட்சம் கோடியை ஒதுக்கியது’’ என்றார் அவர்.

சில உலகளாவிய சந்தைகளில் ரூ.3,000 க்கு விற்கப்படும் யூரியா மூட்டைகள் விவசாயிகளுக்கு ரூ.300 க்கு மிகாமல் வழங்கப்படுவதாக செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் தெரிவித்தார். சில உலக சந்தைகளில் ரூ.3,000-க்கு விற்கப்படும் யூரியா மூட்டைகள், இப்போது நமது விவசாயிகளுக்கு ரூ.300-க்கு அரசு வழங்குகிறது, எனவே நமது விவசாயிகளுக்கு யூரியாவுக்கு ரூ.10 லட்சம் கோடி மானியம் வழங்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

 

***

PKV/DL


(Release ID: 1949067) Visitor Counter : 168