நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான பிரபலங்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் மெய்நிகர் முறையில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கான கூடுதல் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

Posted On: 10 AUG 2023 2:03PM by PIB Chennai

சான்றளிக்கப்பட்ட மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் சுகாதார மற்றும் உடற்பயிற்சி வல்லுநர்கள் அங்கீகரிக்கும் போது அவர்கள் சான்றளிக்கப்பட்ட சுகாதார / உடற்பயிற்சி வல்லுநர்கள் மற்றும் மருத்துவ பயிற்சியாளர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்

 தங்களை சுகாதார வல்லுநர்கள் அல்லது மருத்துவ பயிற்சியாளர்களாகக் காட்டிக்கொள்ளும்  பிரபலங்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் மெய்நிகர் முறையில் செல்வாக்கு செலுத்துபவர்கள் தெளிவான பொறுப்புத்துறப்பை வழங்க வேண்டும்

பிரபலங்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் மெய்நிகர் முறையில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கான கூடுதல் வழிகாட்டுதல்களை நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் நலத் துறை, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் 9 ஜூன் 2022 அன்று வெளியிடப்பட்ட தவறான விளம்பரங்கள் மற்றும் தவறான விளம்பரங்களுக்கான ஒப்புதல்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் 2023 ஜனவரி 20 அன்று வெளியிடப்பட்ட "ஒப்புதல் எவ்வாறு" வழிகாட்டி கையேடு ஆகியவற்றின் முக்கிய நீட்சியாகும்.

சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்,  இந்திய விளம்பரத் தர நிர்ணய கவுன்சில் உள்ளிட்ட அனைத்துப் பங்குதாரர்களுடனும் நடத்தப்பட்ட விரிவான விவாதங்களுக்குப் பிறகு  கூடுதல் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கூடுதல் வழிகாட்டுதல்கள், தவறான விளம்பரங்கள், ஆதாரமற்ற கூற்றுகள்  கையாள்வதைத் தடுப்பது, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு ஒப்புதல்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது ஆகியவற்றை  நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்களின்படி, சான்றளிக்கப்பட்ட மருத்துவப்  பயிற்சியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து சான்றிதழ்களை வைத்திருக்கும் சுகாதார மற்றும் உடற்பயிற்சி வல்லுநர்கள் தகவல்களைப் பகிரும்போது, தயாரிப்புகள் அல்லது சேவைகளை ஊக்குவிக்கும் போது அல்லது ஏதேனும் உடல்நலம் தொடர்பான உரிமைகோரல்களைச் செய்யும்போது, அவர்கள் சான்றளிக்கப்பட்ட சுகாதார / உடற்பயிற்சி வல்லுநர்கள் மற்றும் மருத்துவப் பயிற்சியாளர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

பிரபலங்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் மெய்நிகர் முறையில் செல்வாக்கு செலுத்துபவர்கள், தங்களை சுகாதார வல்லுநர்கள் அல்லது மருத்துவப்  பயிற்சியாளர்கள் என தாங்களாகவே காட்டிக் கொள்ளும் போது, தகவல்களைப் பகிரும்போது, தயாரிப்புகள் அல்லது சேவைகளை ஊக்குவிக்கும் போது அல்லது உடல்நலம் தொடர்பான எந்தவொரு கருத்துக்களையும் கூறும்போது, தெளிவான மறுப்புகளை வழங்க வேண்டும், அவர்களின் ஒப்புதல்கள், தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக பார்க்கப்படக்கூடாது என்பதைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

உணவுப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள், நோய்த் தடுப்பு, சிகிச்சை அல்லது குணப்படுத்துதல், மருத்துவ நிலைமைகள், மீட்பு முறைகள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது உள்ளிட்ட சுகாதார நன்மைகள் போன்ற தலைப்புகளில் பேசும்போது அல்லது உரிமைகோரல்களை முன்வைக்கும்போது இந்த வெளிப்படுத்தல் அல்லது மறுப்பு அவசியம். இந்த வெளிப்படுத்தல் அல்லது பொறுப்புத்துறப்பு ஒப்புதல்கள், உடல்நலம் தொடர்பான வலியுறுத்தல்களைச் செய்யும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காண்பிக்கப்பட வேண்டும்.

'தண்ணீர் குடியுங்கள் மற்றும் நீரேற்றத்துடன் இருங்கள்', 'தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்',  உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்', 'தொடர்ந்து உட்கார்ந்திருப்பதையும் டிவி/போன் பார்க்கும்  நேரத்தையும் குறைக்கவும்', 'போதுமான நல்ல தூக்கத்தைப் பெறுங்கள்', 'விரைவான மீட்புக்கு மஞ்சள் பால் குடியுங்கள்', 'தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்க தினமும் சூரியத்தடுப்பைப்  பயன்படுத்துங்கள்', 'சிறந்த வளர்ச்சிக்காக தலைமுடிக்கு எண்ணெய் தடவுங்கள்' போன்ற பொதுவான ஆரோக்கியம் மற்றும் சுகாதார ஆலோசனைகள் குறிப்பிட்ட தயாரிப்புகள் அல்லது சேவைகளுடன் தொடர்புடையவை அல்ல குறிப்பிட்ட சுகாதார நிலைமைகள் அல்லது விளைவுகளை குறிவைக்கவில்லை. எனவே இந்த வழிகாட்டுதல்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை டிஓசிஏ தீவிரமாக கண்காணித்து செயல்படுத்தும். மீறுபவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 மற்றும் சட்டத்தின் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படலாம்.

இந்த வழிகாட்டுதல்கள் தொழில்துறையை மேலும் வலுப்படுத்தும்; நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கும்.

நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், நியாயமான மற்றும் வெளிப்படையான சந்தையை ஊக்குவிப்பதற்கும், குறிப்பாக அதிகரித்து வரும் செல்வாக்குமிக்க டிஜிட்டல் காலத்தில், இத்துறை  உறுதிபூண்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள் பற்றிய கூடுதல் தகவலுக்குப் பார்வையிடவும்:

https://consumeraffairs.nic.in/sites/default/files/fileuploads/latestnews/Additional%20Influencer%20Guidelines%20for%20Health%20and%20Wellness%20Celebrities%2C%20Influencers%20and%20Virtual%20Influencers.pdf

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1947344    

***(Release ID: 1947515) Visitor Counter : 125