பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் சுகாதார வசதிகளுக்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 05 AUG 2023 9:29AM by PIB Chennai

கோடிக்கணக்கான மக்கள் சுகாதாரத்தின் டிஜிட்டல் வசதிகளால் முழு நன்மைகளைப் பெறுகிறார்கள் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி மிகுந்த மனநிறைவை வெளிப்படுத்தியுள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஒரு ட்வீட்டில், தேசிய தொற்றா நோய்களுக்கான திட்டத்தின் கீழ் என்.சி.டி போர்ட்டல் மூலம் 5 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் (ஏ.பி.எச்.ஏ) உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் ட்வீட்டுக்கு பதிலளித்து பிரதமர் ட்வீட் செய்துள்ளார்;

"நல்ல தகவல்! நாடு முழுவதும் உள்ள ஏழை சகோதர, சகோதரிகளுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்குவதே நமது முன்னுரிமை. இந்த வசதிகள் டிஜிட்டல் மயமாகி கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைவது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. "

***

MS/PKV/DL


(रिलीज़ आईडी: 1945992) आगंतुक पटल : 171
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam