பிரதமர் அலுவலகம்
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 AUG 2023 9:43PM by PIB Chennai
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் பல மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட 5ஜி தளங்களை வெற்றிகரமாக நிறுவியது, நமது தொழில்நுட்ப பயணத்தின் சாதனையைக் குறிக்கிறது என்று அவர் கூறினார்.
உலகின் இரண்டாவது பெரிய 5ஜி சூழலியல் குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“டிஜிட்டல் இணைப்பில் இந்தியா முன்னிலை! பல மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட 5ஜி தளங்களை வெற்றிகரமாக நிறுவியது, நமது தொழில்நுட்ப பயணத்தின் சாதனையைக் குறிக்கிறது. இந்த விரைவான 5ஜி திட்டம், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, வாழ்க்கையை மாற்றியமைக்கிறது மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது.”
***
ANU/BR/SMB/AG
(வெளியீட்டு அடையாள எண்: 1945350)
வருகையாளர் எண்ணிக்கை : 206
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam