பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவின் ஷஹாபூரில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிப்பு

प्रविष्टि तिथि: 01 AUG 2023 8:26AM by PIB Chennai

மகாராஷ்டிரா மாநிலம், ஷஹாபூரில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"மகாராஷ்டிராவின் ஷஹாபூரில் நடந்த மோசமான விபத்தை அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறோம். விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் உள்ளூர் நிர்வாகம் பணியாற்றி வருவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவி கிடைக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi

***

ANU/BR/AG


(रिलीज़ आईडी: 1944554) आगंतुक पटल : 154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam