பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 27 JUL 2023 6:21PM by PIB Chennai

நடைபெறவிருக்கும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர்  கால்பந்து அணிகள் பங்கேற்பது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.  சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்திய ஆடவர் மற்றும் மகளிர்  கால்பந்து அணிகளுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தளர்வுகளை அளித்துள்ளது.

 

இது தொடர்பாக அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் திரு கல்யாண் செளபேயின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

"இந்தியா முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி! இது இந்த விளையாட்டில் வளர்ந்து வரும் திறமையாளர்களை ஊக்குவிக்கும்"

 

(Release ID: 1943346)

******

ANU/PLM/KRS


(रिलीज़ आईडी: 1943453) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam