பிரதமர் அலுவலகம்
இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்)-2022 பிரிவு, பயிற்சி அதிகாரிகள் பிரதமருடன் சந்திப்பு
பயிற்சியின் போது தங்கள் கற்ற முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் விரிவாக கலந்துரையாடினார்
உலகளாவிய தெற்கின் வளர்ச்சிப் பாதைக்கு உதவக்கூடிய முன்னேற விரும்பும் மாவட்டத் திட்டத்தின் வெற்றியை ஆய்வு செய்யுமாறு பயிற்சி அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார்
இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் குறித்து கலந்துரையாடிய பிரதமர், ஜி 20 கூட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து பயிற்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
Posted On:
25 JUL 2023 7:42PM by PIB Chennai
இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்)-2022 பிரிவு, பயிற்சி அதிகாரிகள் எண்-7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று காலை சந்தித்துப் பேசினர்.
அரசுப் பணியில் சேர்ந்த பிறகு, பயிற்சி பெற்ற அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமர், இதுவரை அவர்களின் அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தார். கிராம விஜயம், பாரத தரிசனம் மற்றும் ஆயுதப்படை இணைப்பு உள்ளிட்ட பயிற்சியின் போது பெற்ற கற்றல்களை பயிற்சி அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர். ஜல் ஜீவன் மிஷன் மற்றும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் (பிரதமர் ஆவாஸ் யோஜனா) போன்ற அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது குறித்து அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர்.
மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு கவனம் செலுத்துவது குறித்தும், எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்தத் திட்டங்கள் ஒவ்வொரு ஏழையையும் சென்றடைவது குறித்தும் பிரதமர் விளக்கினார். உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளின் வளர்ச்சிப் பாதையில் உதவுவதற்கு இந்தப் புரிதல் உதவியாக இருக்கும் என்பதால், முன்னேற விரும்பும் மாவட்டத் திட்டத்தின் செயலாக்கம் மற்றும் வெற்றியை ஆய்வு செய்யுமாறு பயிற்சி அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் குறித்தும் பிரதமர் விவாதித்தார், மேலும் ஜி 20 கூட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து பயிற்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சுற்றுச் சூழல் பிரச்சனைகள் குறித்துப் பேசிய பிரதமர், சுற்றுச்சூழல் தொடர்பான வாழ்க்கை முறை திட்டம் குறித்து விளக்கியதோடு, பருவநிலை மாற்றத்தின் பிரச்சனையை ஒவ்வொருவரும் நம் வாழ்க்கை முறை மாற்றத்தால் திறம்பட சமாளிக்க முடியும் என்றார்.
***
AP/KPG
(Release ID: 1942598)
Visitor Counter : 156
Read this release in:
Manipuri
,
Malayalam
,
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada