பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருடன் பிரதமரின் சந்திப்பு

Posted On: 15 JUL 2023 6:06PM by PIB Chennai

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை 2023 ஜூலை 15-ம் தேதியன்று பிரதமர் அபுதாபியில் நேரில் சந்தித்தார்.

வர்த்தகம் மற்றும் முதலீடு, நிதித்தொழில்நுட்பம், ஆற்றல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கை, உயர்கல்வி மற்றும் மக்களுடனான உறவுகள் உள்பட இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இரு தலைவர்களும் மூன்று முக்கிய ஆவணங்களை பரிமாறிக்கொண்டனர்:

எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் நாணயங்களின் (ரூபாய் -ஐக்கிய அரபு அமீரக திராம் ) பயன்பாட்டை மேம்படுத்தும் கட்டமைப்பை ஏற்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரக மத்திய வங்கி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

பணம் செலுத்துதல் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் இருதரப்பு ஒத்துழைப்புக்காக இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரக மத்திய வங்கி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஐஐடி டெல்லி அதன் கிளையை அபுதாபியில் நிறுவ திட்டமிட்டு வரும் நிலையில், அதற்காக இந்திய கல்வி அமைச்சகம், அபுதாபி கல்வி மற்றும் அறிவுத் துறை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்த சந்திப்புக்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. பருவநிலை மாற்றம் குறித்த தனி கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

***

AP/CR/DL


(Release ID: 1939823) Visitor Counter : 147