நிலக்கரி அமைச்சகம்

6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரியை வாயுப்படுத்தும் திட்டங்களை ஊக்குவிக்கும் விரிவான திட்டத்தை செயல்படுத்த நிலக்கரி அமைச்சகம் பரிசீலனை

Posted On: 14 JUL 2023 12:20PM by PIB Chennai

நிலக்கரி வாயுவாக்கல் மூலம் மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த மத்திய நிலக்கரி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் நிலக்கரி வாயு உற்பத்தியை 100 மில்லியன் டன்னாக அதிகரிக்க நிலக்கரி அமைச்சகம் விலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த முன்மொழிவை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிலக்கரி அமைச்சகம் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. நிலக்கரி வாயுவாக்கத்திற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, இயற்கை வளங்களை பயன்படுத்தும் நடவடிக்கைகளை இத்திட்டம் ஊக்குவிக்கிறது. மற்ற துறைகளை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் நாட்டின் வருங்கால எரிசக்தி தேவைகளை சமாளிக்கவும் இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

வாயுவாக்கல் தொழில்நுட்பத்தை இந்தியாவில் பின்பற்றுவதன் மூலம் நிலக்கரித் துறையை புரட்சிகரமாக மாற்றமுடியும். இயற்கை வாயு, மெத்தனால், அமோனியா மற்றும் இதர தேவையான பொருட்களை இறக்குமதி செய்வது குறையும்.  இந்தியா இயற்கை வாயுவை 50 சதவீதமும், மொத்த மெத்தனால் நுகர்வில் 90 சதவீதத்தையும், அமோனியா நுகர்வில் 13 முதல் 15 சதவீதத்தையும் இறக்குமதி செய்கிறது. வாயுவாக்கல் நடவடிக்கையால் 2030-வாக்கில் நாட்டின் இறக்குமதி குறைந்து வளர்ச்சி அதிகரிக்கும்.

நிலக்கரி வாயுவாக்கல்  மேம்பாட்டை ஊக்குவிக்க மத்திய நிலக்கரி அமைச்சகம், புதுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள்  மூலம் செயல்படுத்த 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1939399

***

LK/PKV/RS/AG



(Release ID: 1939493) Visitor Counter : 143