இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023-க்கான கோப்பையை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள்துறை அமைச்சர் திரு.அனுராக் சிங் தாக்கூர் அறிமுகம் செய்தார்

Posted On: 13 JUL 2023 4:33PM by PIB Chennai

சென்னையில் நடைபெற்ற ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி, 2023-க்கான கோப்பையை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் மைதானத்தில் இன்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த விழாவில்  ‘பாஸ் தி பால் டிராபி டூர்’ பிரச்சாரத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி, சென்னை 2023 போட்டி 2023 ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, கொரியா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன.

விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் சென்னை மிகச் சிறந்து விளங்குவதாகவும்,  தங்கள் அரசு கூட்டாட்சி முறையை நம்புவதாகவும், இது விளையாட்டிலும் பொருந்தும் என்றும் அவர் கூறினார். அனைவரது ஒத்துழைப்பும் சேர்ந்து இந்த நிகழ்வை மிகப்பெரிய அளவில் வெற்றியடையச் செய்யும் எனவும், அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இந்தியாவில் இருந்து நல்ல நினைவுகளுடன் திரும்பிச் செல்வர் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்குப் பிறகு, டெல்லி, சண்டிகர், கவுகாத்தி, பாட்னா, புவனேஸ்வர், ராஞ்சி, பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களுக்கும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் கோப்பை எடுத்துச் செல்லப்படவுள்ளது.

மேலும் விபரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1939208

***

AD/CR/GK



(Release ID: 1939307) Visitor Counter : 130