பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

பாலியல் குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பெறுவோருக்கு உதவ நிர்பய நிதியின் கீழ், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டம்

Posted On: 11 JUL 2023 1:08PM by PIB Chennai

பாலியல் குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பெறுவோருக்கு உதவ நிர்பய நிதியின் கீழ், பரிந்துரைகளை அனுப்புமாறு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.

பாலியல் கும்பல் வன்புணர்வு சம்பவத்தில் இருந்து தப்பித்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டு கர்ப்பிணியான சிறுமிகளுக்கு நீதி கிடைக்கவும் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருப்பவர்களுக்கு உதவவும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நிர்பயா நிதியின் கீழ், ரூ.74.10 கோடி ஒதுக்கியுள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு செல்லும் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பான போக்குவரத்து, உணவு மற்றும் தினசரி தேவைகள், தங்குமிடம் ஆகியவற்றுக்காகவும், பாலியல் வன்புணர்வால் கர்ப்பிணியாகி, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட சிறுமிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு  சட்டஉதவி அளிப்பதற்கு இத்திட்டம் வகை செய்கிறது.

கடந்த 2021-ம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளித்த தகவலின்படி, போக்சோ சட்டத்தின் கீழ்,  51,863 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 64 சதவீத வழக்குகள் (33,348) பிரிவு 3 மற்றும் 5-ன் கீழ் பதிவு செய்யப்பட்டன.

பிரிவு 3 மற்றும் 5-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட 33,348 வழக்குகளில் 99 சதவீத வழக்குகள் (33,036) சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்ற குற்றச்செயல்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

திட்டத்தின் நோக்கம்:

  1. ஒரே அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்த ஆதரவு மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உதவுதல்.
  2. கல்வி, காவல் உதவி, மருத்துவ உதவி, உளவியல் மற்றும் மனநல ஆலோசனை, சட்ட உதவி, பாதிக்கப்பட்ட சிறுமி, அவருடைய குழந்தைக்கு காப்பீடு, அச்சிறுமிக்கான மறுவாழ்வு ஆகியவற்றை விரைவாக ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவருதல்.

தகுதி

போக்சோ சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 5-ன் கீழ், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள்

ஆதரவற்றவர்கள் அல்லது குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர் அல்லது குடும்பத்தினருடன் வாழ விரும்பாதவர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938626

***

AP/IR/RS/AG



(Release ID: 1938707) Visitor Counter : 115