கூட்டுறவு அமைச்சகம்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, வரும் 14-ம் தேதி புதுதில்லியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை வலுப்படுத்துதல் குறித்த மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார்

Posted On: 10 JUL 2023 2:57PM by PIB Chennai

2023 ஜூலை 14-ம் தேதி புதுதில்லியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு.அமித் ஷா, உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை வலுப்படுத்துதல் என்ற ஒரு நாள் மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த மாநாட்டில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மூலம் தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை வலுப்படுத்தும் வழிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இந்த மாநாட்டில், வேளாண் துறையைச் சேர்ந்த நிபுணர்களும்,  நாடு முழுவதிலுமிருந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேவுள்ளனர். மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் இந்த மாபெரும் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. பிரதமர் திரு.நரேந்திர மோடியின் “கூட்டுறவின் மூலம் செழிப்பு” திட்டத்தை நனவாக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான  திரு.அமித் ஷாவின் முயற்சியினால், கூட்டுறவுத் துறையில் 1,100 புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க வேண்டுமென அண்மையில் முடிவெடுக்கப்பட்டது.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சிறு,குறு விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு நல்ல விலையைப் பெறவும், போக்குவரத்துச் செலவைக் குறைக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன. நாடு முழுவதும் 13 கோடி விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நிலையில், இந்த விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

***

AP/CR/KRS



(Release ID: 1938496) Visitor Counter : 133