பிரதமர் அலுவலகம்
சுவாமி விவேகானந்தரை அவரது புண்ணிய திதியில் நினைவு கூர்ந்துள்ளார் பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
04 JUL 2023 6:29PM by PIB Chennai
சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளில், அவரை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருடைய சேவை, மனிதநேயம், ஆன்மீக அறிவொளி ஆகிய லட்சியங்கள், வலிமையான மற்றும் துடிப்பான இந்தியாவைக் கட்டியெழுப்ப நம்மைத் தொடர்ந்து ஊக்குவித்து வழிநடத்துகின்றன என்று கூறியுள்ளார்.
பிரதமர் ட்வீட்டரில் கூறியிருப்பதாவது;
“புண்ணிய திதியில் சுவாமி விவேகானந்தரை நினைவு கூர்கிறேன். அவரது சேவை, மனிதநேயம், ஆன்மீக அறிவொளி ஆகிய லட்சியங்கள் வலுவான மற்றும் துடிப்பான இந்தியாவைக் கட்டியெழுப்ப நம்மைத் தொடர்ந்து ஊக்குவித்து வழிகாட்டுகின்றன. ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் பற்றிய அவரது பார்வையை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துவோம்’’.
***
AD/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1938260)
வருகையாளர் எண்ணிக்கை : 158
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam