வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜூலை 7-8 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள மேயர் மாநாட்டில் ஜி20-ன் யு20 செயல்பாட்டுக்குழு சந்திக்கவுள்ளது

Posted On: 05 JUL 2023 12:17PM by PIB Chennai

குஜராத் மாநிலம் அகமதாபாத், காந்திநகரில் 2023, ஜூலை 7-8 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள மேயர் மாநாட்டில் ஜி20ன் யு20 செயல்பாட்டுக்குழு சந்திக்கவுள்ளது. இந்தியாவில் உள்ள 35 நகரங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள 57 நகரங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இம்மாநாட்டில் மேயர்கள், துணை மேயர்கள், நகரங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்  யு20 மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக விரிவான ஏற்பாடுகளையும் செய்துள்ள அகமதாபாத் நகரம் பிரதிநிதிகளை வரவேற்க தயார் நிலையில் உள்ளது.  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், தேசிய நகர்ப்புற விவகார கழகம், யு20-ன் தொழில்நுட்ப செயலகம், யு20 ஏற்பாட்டாளர்கள் ஆகியவை இம்மாநாட்டை நடத்துவதற்கு அகமதாபாத் நகரத்திற்கு உதவிகரமாக உள்ளன.

மேயர் மாநாட்டை குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையமைச்சர் திரு கௌசல் கிஷோர் ஆகியோர் ஜூலை 7 அன்று முறைப்படி தொடங்கிவைக்கவுள்ளனர். அகமதாபாத் மேயர் திரு கீர்த்திகுமார் ஜே பார்மர், பிரதிநிதிகளை வரவேற்கவுள்ளார்.

***

AD/IR/AG/KRS


(Release ID: 1937640) Visitor Counter : 154