ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

விவசாயிகளுக்கான சிறப்புத் திட்ட அறிவிப்பு குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வேளாண்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடினார்

Posted On: 30 JUN 2023 6:30PM by PIB Chennai

விவசாயிகளுக்கான சிறப்புத் திட்ட அறிவிப்பு குறித்து 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வேளாண்துறை அமைச்சர்களுடன் மத்திய ரசாயனம், உரங்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடினார்.  இந்தக் கூட்டத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் உடனிருந்தார்.  

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ரூ. 3,68,676.7 கோடி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி வரிகள் மற்றும் வேம்பு சேர்த்தல் கட்டணம் நீங்கலாக 45 கிலோ கிராம் யூரியா மூட்டை விவசாயிகளுக்கு ரூ.266.70-க்கு கிடைப்பதை உறுதிசெய்யும் மானியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  2023-24 கரீஃப் பருவத்திற்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ. 38,000 கோடியும் இந்த சிறப்புத் திட்டத்தில் அடங்கும் என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

இலை, தழைகள் மூலமான இயற்கை உரங்களை ஊக்கப்படுத்துவதற்கு சந்தை மேம்பாட்டு உதவியாக ரூ. 1,451.84 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

விவசாயத்திற்காகவும், விவசாயிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ள யூரியாவை தொழில்துறை போன்ற வேறு துறைகளுக்கு மாற்றப்படுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை டாக்டர் மாண்டவியா கேட்டுக்கொண்டார்.

 

****

AP/SMB/RJ/KRS



(Release ID: 1936525) Visitor Counter : 163