பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹல் திவஸ் எனப்படும் கிளர்ச்சி தினத்தை முன்னிட்டு ஆதிவாசி சமுதாயத்தின் தியாகிகளுக்கு பிரதமர் மரியாதை

प्रविष्टि तिथि: 30 JUN 2023 4:31PM by PIB Chennai

ஹல் திவஸ் எனப்படும் கிளர்ச்சி தினத்தையொட்டி ஆதிவாசி சமுதாயத்தின் தியாகிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:

“கிளர்ச்சி தினத்தையொட்டி நமது பழங்குடியின சமுதாயத்தின் நூற்றுக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகளுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறப்பான தினம், சித்தோ – கன்ஹூ, சந்த் – பைரவ், ஃபுலோவ் – ஜானோ போன்ற துணிச்சல்மிக்க தீரர்கள் மற்றும் அநீதிக்கு எதிராகப் போராடிய பலரையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்தப் போராட்ட வரலாறு நாட்டு மக்களை எப்போதும் ஊக்குவிக்கும்”.


***

(Release ID: 1936401)

AP/PKV/RR/KRS

 


(रिलीज़ आईडी: 1936420) आगंतुक पटल : 216
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam