பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேச மாநிலம் தாதியாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து கருணைத் தொகை அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
28 JUN 2023 8:08PM by PIB Chennai
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தாதியா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் (பிஎம்என்ஆர்எஃப்) இருந்து கருணைத் தொகை வழங்கப்படும் என திரு. மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்திருப்பதாவது;
“தாதியா விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் கருணைத்தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @ நரேந்திரமோடி"
----
PKV/AM/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1936220)
வருகையாளர் எண்ணிக்கை : 159
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam