பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐந்து வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Posted On: 27 JUN 2023 10:01PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து ஐந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஐந்து வந்தே பாரத் ரயில்கள், போபால் (ராணி கமலாபதி) - இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; போபால் (ராணி கமலாபதி) - ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ராஞ்சி - பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; தார்வாட் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் கோவா (மட்கான்) - மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை ஆகும்.

ராணி கமலாபதி - இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் முதல் பெட்டியை ஆய்வு செய்த பிரதமர், அந்த ரயிலில் பயணித்த குழந்தைகள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

போபால் (ராணி கமலாபதி) - இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணம் செய்த இந்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ஷங்கர் லால்வானியின் ட்வீட்டிற்குப் பதிலளித்த பிரதமர், மத்தியப் பிரதேச மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், இது உஜ்ஜைனி செல்லும் யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும்.

ஜபல்பூரில், போபால் (ராணி கமலாபதி) - ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வரவேற்ற ஜபல்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ராகேஷ் சிங்கின் ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர், தலைநகர் போபாலுக்கும் கலாச்சார தலைநகர் ஜபல்பூருக்கும் இடையே சிறந்த இணைப்பை ஏற்படுத்த இந்த ரயில் வழிவகுக்கும் என்று ட்வீட் செய்துள்ளார். மேலும், இது சுற்றுலாவை மேம்படுத்தும்; யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் என்று கூறியுள்ளார்.

 

ராஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ சஞ்சய் சேத்தின் ட்வீட்டுக்கு பதிலளித்த திரு நரேந்திர மோடி, ராஞ்சி - பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கனிம வளம் நிறைந்த ஜார்கண்ட், பீகார் மாநிலங்கள் வளமை அடைய உதவும் என்றார்.

கோவா (மட்கான்) - மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடர்பான கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்தின் ட்வீட்டுக்கு பதிலளித்து பிரதமர் செய்துள்ள ட்வீட்டில்,

"வந்தே பாரத் ரயில் கோவாவின் இயற்கை எழிலைக் கண்டறிய அதிகமான சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும். இது கொங்கன் கடற்கரை பகுதி முழுவதுக்கும் தொடர்பை மேம்படுத்தும்."

தார்வாட் - பெங்களூரு வந்தே பாரத் விரைவு ரயிலில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கர்நாடக ஆளுநர் ஸ்ரீ தவார்சந்த் கெலாட் பயணம் செய்தனர். ஜோஷியின் ட்வீட்டிற்குப் பதிலளித்து பிரதமர் செய்துள்ள ட்வீட்டில்,

"தர்வாட்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கர்நாடகா முழுவதுக்கும் தொடர்பை மேம்படுத்தும். இது மாநிலத்தின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும்."

*****

 (Release ID: 1935759)

AP/Ant/RR


(Release ID: 1935830) Visitor Counter : 131