சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

அமர்நாத் யாத்திரை மேற்கொள்வோருக்கான சுகாதார வசதிகளைமத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்

Posted On: 27 JUN 2023 4:29PM by PIB Chennai

அமர்நாத் யாத்திரை மேற்கொள்வோருக்கான சுகாதார சேவைகள் மற்றும் கூடுதல் சுகாதார வசதிகளை மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, சுகாதார அமைச்சகம், சுகாதார சேவை தலைமை இயக்குநரக உயர் அதிகாரிகளுடன் இணைந்து இன்று ஆய்வு செய்தார்.

யாத்திரை இடம் மற்றும் யாத்திரை செல்லும் வழி ஆகிய இடங்களில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச யாத்ரீகர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன் மூலம் கடினமானப் பயணம் மேற்கொள்ளும் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும் என்று கூறினார்.

பல்டால், சந்தன்வரி ஆகிய இரண்டு வழித்தடங்களில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 100 மருத்துவ படுக்கை வசதிகள் கொண்ட இரண்டு மருத்துவமனைகள் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும். விபத்து சிகிச்சைப் பிரிவுடன் சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதார அமைச்சகம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.  

***

AP/IR/AG/KRS



(Release ID: 1935648) Visitor Counter : 140