பிரதமர் அலுவலகம்

பிரதமர், ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோர் யோகாவின் முக்கியத்துவத்தை விலியுறுத்தியுள்ளனர்

Posted On: 21 JUN 2023 8:43PM by PIB Chennai

யோகாவின் முக்கியத்துவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரசின் கருத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புக்கொண்டுள்ளார். யோகா தினம் நம் அனைவரையும் ஒருங்கிணைத்து, நமது கிரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் பிரதமர் வாழ்த்தினார்.

 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், பிரிந்து கிடக்கும் உலகில், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களை யோகா ஒன்றிணைக்கிறது, அது வலிமை, நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான ஆதாரமாக உள்ளது என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த டிவிட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் கூறியிருப்பதாவது;

“யோகாவின் முக்கியத்துவம் குறித்து ஐநா பொதுச்செயலாளருடன் முழுமையாக உடன்படுகிறேன். யோகா தினம் நம் அனைவரையும் நெருங்கி வரச்செய்து , நமது கிரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தட்டும்.

***

AD/PKV/DL



(Release ID: 1934998) Visitor Counter : 103