பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் தலைமையில் 9வது சர்வதேச யோகா தினம்

प्रविष्टि तिथि: 21 JUN 2023 7:58PM by PIB Chennai

ஜூன் 21 அன்று நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்தின் வடக்கு புல்வெளியில் 9வது ஆண்டு சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள் 'வசுதைவ குடும்பத்திற்கு யோகா'. "வசுதைவ குடும்பகம்" அல்லது "ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம்".

இந்த நிகழ்ச்சி  135 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான யோகா ஆர்வலர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றது, யோகா அமர்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்றதற்காக கின்னஸ் உலக சாதனை படைத்தது. ஐநா பொதுச்செயலாளர் திரு. அன்டோனியோ குட்டெரசின் காணொலி செய்தி ஒளிபரப்பட்டது.

இந்த நிகழ்வில், 77-வது ஐநா பொதுச்சபையின் தலைவர் திரு சபா கோரோசி, நியூயார்க் நகர மேயர் திரு எரிக் ஆடம்ஸ், ஐநா துணை பொதுச்செயலாளர் திருமிகு அமினா ஜே முகமது உள்பட  பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் - இராஜதந்திரிகள், அலுவலர்கள், கல்வியாளர்கள், சுகாதார வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்துறை தலைவர்கள், ஊடகப் பிரமுகர்கள், கலைஞர்கள், ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

யோகா அமர்வுக்கு முன்னதாக, இந்தியாவின் ஐநா பாதுகாப்பு சபை தலைமைத்துவத்தின் போது, கடந்த  டிசம்பர் மாதம் திறக்கப்பட்ட மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலைக்கு பிரதமர் மலரஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் வடக்கு புல்வெளியில் உள்ள அமைதி காக்கும் படை நினைவிடத்திலும் பிரதமர் மரியாதை செலுத்தினார்.

***

AD/PKV/DL


(रिलीज़ आईडी: 1934996) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Manipuri , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam