ரெயில்வே அமைச்சகம்
சர்வதேச/இந்தியாமேம்பாட்டுக்கான அமெரிக்க முகமையுடன் இந்திய ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டுள்ளது
Posted On:
23 JUN 2023 9:49AM by PIB Chennai
கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்திய ரயில்வே பல முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில், புதுப்பிக்கவல்ல எரிசக்தி மற்றும் எரிசக்தித் திறன் குறித்த ஒத்துழைப்புக்காக சர்வதேச/இந்தியா மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமையுடன் இந்திய ரயில்வே 2023 ஜூன் 14 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ரயில்வே துறை சார்பில் ரயில்வே வாரிய உறுப்பினர் திரு நவீன் குலாத்தி, சர்வதேச/இந்தியா மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமை சார்பில் அதன் துணை நிர்வாகி திருமதி இசபெல் கோல்மன் ஆகியோர் கையெழுத்திட்டனர். ரயில்வே வாரியத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு அனில் குமார் லஹோத்தி முன்னிலை வகித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ரயில்வேக்கு கீழ்க்காணும் துறைகளில் தொழில்நுட்ப உதவி கிடைக்கும்.
- இந்திய ரயில்வேக்கான தூய எரிசக்தி உள்ளிட்ட நீண்டகால எரிசக்தி திட்டம்
- இந்திய ரயில்வே கட்டிடங்களுக்கான எரிசக்தித் திறன் கொள்கை மற்றும் செயல்திட்டம் உருவாக்குதல்
- இந்திய ரயில்வேயின் கரியமிலவாயு இல்லாத தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்ற தூய எரிசக்தி கொள்முதலுக்கான திட்டமிடல்
- முறைப்படுத்தல் மற்றும் அமலாக்கத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவி
- நடைமுறைக்கு உகந்த, பெருமளவில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி கொள்முதலுக்கான திட்டமிடல் மற்றும் நிர்வாக உதவி
- உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் களப்பயணங்கள், ஆய்வுப் பயணங்கள் உள்ளிட்டவற்றில் கூட்டாக நிகழ்வுகள், கருத்தரங்குகள், திறன் கட்டமைப்பு நிகழ்ச்சிகளை நடத்துதல்
***
AD/SMB/RJ/KRS
(Release ID: 1934724)
Visitor Counter : 189