பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாம் தேயிலை தோட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு பிரதமர் வரவேற்பு

Posted On: 17 JUN 2023 8:36PM by PIB Chennai

அசாம் அரசின் புதிய முயற்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

ஜூன் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 25 ஆம் தேதி வரை, அசாம் அரசு 38 புதிய மேல்நிலைப் பள்ளிகளை மாணவர் சமூகத்திற்காக அர்ப்பணிக்கவுள்ளது. 38 பள்ளிகளில் 19 பள்ளிகள் தேயிலைத் தோட்டப் பகுதியில் இருக்கும்.

அசாம் முதல்வர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மாவின் ட்வீட்டிற்கு பதிலளித்த பிரதமர் கூறியிருப்பதாவது:

"பாராட்டத்தக்க முன்முயற்சி. கல்வி ஒரு வளமான தேசத்தின் அடித்தளமாகும். இந்த புதிய மேல்நிலைப் பள்ளிகள் இளைஞர்களுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கும். குறிப்பாக தேயிலை தோட்டப் பகுதிகளுக்கான அர்ப்பணிப்பைப் பற்றி கேள்விப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்."

***

AD/PKV/DL


(Release ID: 1933208)