விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலையான மற்றும் உள்ளடக்கிய உணவு முறைகளை உருவாக்குவதற்கான வழிகளைக் குறு விவசாயிகளை மையமாக வைத்து கண்டறிய வேண்டும் - பிரதமர் திரு நரேந்திர மோடி

Posted On: 17 JUN 2023 3:29PM by PIB Chennai

ஜி-20 நாடுகள் வரலாற்றில் முதன்முறையாக "விளைவு ஆவணம் மற்றும் தலைமையின் சுருக்கம்" என்ற தலைப்பில் விளைவு ஆவணத்தை ஏற்றுக்கொண்டன.

 

ஜி-20 விவசாய அமைச்சர்கள் கூட்டத்தில் பல்வேறு விசயங்களில் பொதுவான ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. வரலாற்றில் முதன்முறையாகும் 

 

ஜூன் 15-17, 2023 இல் நடந்த ஜி20 விவசாய அமைச்சர்கள் கூட்டம், "விளைவு ஆவணச் சுருக்கம்" என்ற தலைப்பில் ஒப்புக் கொள்ளப்பட்ட விளைவு ஆவணத்தை ஏற்றுக்கொண்டது. தலைமையின் இந்த வரலாற்று ஒருமித்த கருத்து, விவசாயத் துறையை மையமாகக் கொண்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றிய விவாதங்களுக்குப் பிறகு எட்டப்பட்டது.

 

16 ஜூன் 2023 அன்று, அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது. பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். விவசாயத்துறை  எதிர்கொள்ளும் சவால்களை களைவதன் மூலம் மனிதகுலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கு ஜி -20 விவசாய அமைச்சர்கள் கூட்டாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

 

விவசாய அமைச்சர்கள் கூட்டத்தின் போது கலந்துரையாடலுக்கான நான்கு முன்னுரிமைப் பகுதிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்: 1) உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக விவசாய பன்முகத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துதல்,

2) பருவநிலைக்கு ஏற்ற தொழில்நுட்பங்களுக்கு நிதியளித்தல்

3) சிறு மற்றும் குறு விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்தி விவசாய மதிப்புச் சங்கிலிகள் மற்றும் உணவு முறைகளை ஊக்குவித்தல்

4) டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்தை மாற்றுவதற்கு டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்துதல் மற்றும் விவசாய தரவு தளத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துதல்.

 

2023 ஆம் ஆண்டை சர்வதேச தினைகள் ஆண்டாக கொண்டாடி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். தினை/ ஸ்ரீ அன்னா ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, விவசாயிகள் வருமானப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதன் மூலமும், பருவநிலையை எதிர்க்கும் தன்மையைக் கட்டியெழுப்புவதன் மூலமும் நிலையான வாழ்வாதாரத்தை அடைய விவசாயிகளுக்கு உதவுகின்றன என்றார்.

 

நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் ரமேஷ் சந்த், "உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து" என்ற தலைப்பில் இன்றைய சவால்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகளை எடுத்துரைத்து விளக்கமளித்தார்.

வளரும் நாடுகள் ஜி 20 செயல்முறையுடன் சிறப்பாக ஈடுபடுவதை உறுதி செய்வதன் மூலம் ஜி 20 "மனித-மைய வளர்ச்சியை" மேம்படுத்துவதற்கு சிறந்த முடிவுகளைத் தர முடியும் என்றார்.

 

விவசாயத் துறையில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்த வேளாண் அமைச்சர், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான இந்தியாவின் அணுகுமுறை "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற உணர்வால் வழிநடத்தப்படுகிறது என குறிப்பிட்டார்.

 

விவசாயப் பணிக்குழு நடவடிக்கைகளை வெற்றிகரமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும் மாற்றுவதில் ஜி20 உறுப்பினர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வேளாண் அமைச்சர் பாராட்டினார்.

 

விவசாய நிகழ்ச்சி நிரலை மேம்படுத்துவதற்கும் உயர்த்துவதற்குமான   இந்தியாவின் முயற்சிகள் அனைத்து ஜி 20 உறுப்பினர்களாலும் பாராட்டப்பட்டதோடு நன்றி தெரிவிக்கப்பட்டது.

 

இதற்கு முன், இந்தூர், சண்டிகர் மற்றும் வாரணாசியில் மேலும் மூன்று முக்கிய கூட்டங்கள் நடைபெற்றன. வாரணாசியில் நடந்த கூட்டத்தின் போது, ​​சர்வதேச சிறுதானியங்கள் மற்றும் பிற பண்டைய தானியங்கள் ஆராய்ச்சி முயற்சி (மகரிஷி)" தொடங்கப்பட்டது.

 

விவசாயத்தில் இந்தியாவின் ஜி-20 முன்னுரிமைகள் நமது 'ஒரே பூமியை' குணப்படுத்துவது, நமது 'ஒரு குடும்பத்தில்' நல்லிணக்கத்தை வளர்ப்பது மற்றும் பிரகாசமான 'ஒரு எதிர்காலத்திற்கான' நம்பிக்கையை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

***

AD/CJL/DL


(Release ID: 1933124) Visitor Counter : 196