பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் மாநிலம் தவுசாவில் பிரதமரின் மகளிர் மகப்பேறு நலத்திட்டத்தை வளைகாப்பு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்ட புதிய முன்னெடுப்புக்குப் பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 12 JUN 2023 6:45PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் தவுசாவில் பிரதமரின் மகளிர் மகப்பேறு நலத்திட்டத்தை வளைகாப்பு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்ட புதிய முன்னெடுப்புக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தார்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலம், தவுசா மக்களவை உறுப்பினர் திருமதி ஜாஸ்கர் மீனா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமரின் மகளிர் மகப்பேறு நலத்திட்டத்தை வளைகாப்பு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டு, அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டதாக  கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் மட்டும் 2022-23ம் ஆண்டில் இத்திட்டத்தின் மூலம் 3.5 லட்சம் பெண்கள் பயனடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தவுசா மக்களவை உறுப்பினரின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் ட்விட்டரில் பதிலளித்து இருப்பதாவது:

தவுசாவின் இந்த தனித்துவமான முயற்சி, பிரதமரின் மகளிர் மகப்பேறு நலத்திட்டத்திற்கு புதிய சக்தியை அளிக்கப் போகிறது. இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆரோக்கிய பாதுகாப்பை உறுதி செய்கிறது.

***

 

AD/IR/RS/GK


(रिलीज़ आईडी: 1931795) आगंतुक पटल : 203
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Odia , Kannada , Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Malayalam