சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலை சட்ட சேவைத்திட்டம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது: 40 லட்சம் பேருக்கு வழக்குக்கு முந்தைய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 30 MAY 2023 2:02PM by PIB Chennai

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தொலை சட்ட சேவைத் திட்டம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இத்திட்டத்தின் நாடு முழுவதும் 40 லட்சம் பயனாளிகள் வழக்குகளுக்கு முந்தைய ஆலோசனைகளை பெற்று பயனடைந்துள்ளனர்.

தொலை சட்ட சேவைப் பற்றிய விளக்கம்: சட்ட சேவைகளை எளிதில் பெற முடியாதவர்களுக்கு வழக்குக்கு முந்தைய கட்டத்தில் சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கான ஒரு இணையதள  வழிமுறையாக இது செயல்படுத்தப்படுகிறது. ஊராட்சி அளவில் அமைந்துள்ள பொது சேவை மையங்களில் (சி.எஸ்.சி) உள்ள காணொலிக் காட்சி அல்லது  தொலைபேசி வசதி மூலம் சட்ட உதவிகளை  தேவைப்படுபவர்கள் பெற முடியும்.  சட்ட உதவி தேவைப்படும் ஏழைகள்  மற்றும் பின்தங்கிய மக்களை வழக்கறிஞர்களுடன் இது இணைக்கிறது. 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தொலை சட்ட சேவை இப்போது டெலி-லா எனப்படும் மொபைல் செயலியின் மூலமாகவும், நேரடியாக கிடைக்கிறது.

******

AP/PLM/RS/KRS


(रिलीज़ आईडी: 1928301) आगंतुक पटल : 231
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam