பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற விருப்பத்தை முன்னிறுத்திய வழிகாட்டுதலின்படியே, அனைத்து முடிவுகளும், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன: பிரதமர்

Posted On: 30 MAY 2023 9:55AM by PIB Chennai

நாட்டுக்கு சேவையாற்றுவதில் ஒன்பது ஆண்டுகளை மத்திய அரசு வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பணிவுடன் கூடிய தமது நன்றியை மக்களுக்கு தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"நாட்டிற்கு சேவையாற்றுவதில் இன்றைக்கு வெற்றிகரமாக ஒன்பது ஆண்டுகளை நாங்கள் நிறைவு செய்துள்ளோம்.  இதனால் பணிவுடன் கூடிய நன்றியுணர்வால் எனது இதயம் நிறைந்திருக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற விருப்பத்தை முன்னிறுத்திய வழிகாட்டுதலின்படியே, அனைத்து முடிவுகளும், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை கட்டமைப்பதற்காக எங்களது கடின உழைப்பைத் தொடர்ந்து அளிப்போம். #9YearsOfSeva"

***

(Release ID: 1928184)

AD/ES/MA/RK


(Release ID: 1928237) Visitor Counter : 160