பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது: பிரதமர்

Posted On: 28 MAY 2023 12:02PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நேரடியாகப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்ததன் மூலம்  நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தைத்  திரு மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வு பற்றிப் பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

“நாட்டு மக்களாகிய நம் அனைவருக்கும் இன்று மறக்க முடியாத நாள். நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது. இந்த தெய்வீகமான, அற்புதமான கட்டடம், மக்களின் அதிகாரத்துடன், தேசத்தின் வளம் மற்றும் வலிமைக்குப் புதிய வேகத்தையும் பலத்தையும் தரும் என்று நான் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன்."

“இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் திறக்கப்பட்ட நிலையில், நமது இதயங்களும் மனங்களும் பெருமை, நம்பிக்கை மற்றும் வாக்குறுதியால் நிரம்பியுள்ளன. வரலாற்றுச் சின்னமான இந்தக் கட்டடம் அதிகாரமளிக்கும் தொட்டிலாக இருக்கட்டும், கனவுகளைத் தூண்டி அவற்றை நனவாக்கட்டும்.  மகத்தான  நமது தேசத்தை முன்னேற்றத்தின் புதிய உச்சத்திற்கு இது கொண்டு செல்லட்டும்."

***

AD/SMB/DL


(Release ID: 1927860) Visitor Counter : 199