தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

‘இந்தியா: முன்னேற்றப் பாதையில்’ என்ற கருப்பொருளில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாட்சிகளின் விரிவான குழு விவாதம் குறித்த தேசிய மாநாடு

Posted On: 27 MAY 2023 6:26PM by PIB Chennai

மத்திய அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தால் "9 ஆண்டுகள் சேவா, சுஷாசன், கரிப் கல்யாண்" என்ற கருப்பொருளுடன் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு.நரேந்திர மோடியின்  தலைமையின் கீழ் செய்யப்பட்ட பல்வேறு சாதனைகள் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து மூன்று அமர்வுகள் நடத்தப்பட்டன.

 

முதல் அமர்வு ‘இந்தியா: முன்னேற்றப் பாதையில்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ் இந்தியா எவ்வாறு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மாறியுள்ளது என்பது குறித்து இந்த அமர்வு தெளிவுபடுத்தியது.

 

இந்த அமர்வில் பிரபல பத்திரிகையாளர் திரு.நிதின் கோகலே நடுவராக இருந்தார். பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருமதி சுனில் பார்தி மிட்டல், அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநர் சங்கீதா ரெட்டி, நாஸ்காம் தலைவர் திருமதி தேப்ஜானி கோஷ் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பேச்சாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 

“கடந்த 9 ஆண்டுகளில் நம் நாட்டிற்கு மிகவும் பிரகாசமான எதிர்காலத்திற்கான அடித்தளம் போடப்பட்டுள்ளது. மேலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உருவாக்க வேண்டும். வலுவான தலைமை கொண்ட இந்தியாவுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. நமது இளைஞர்களுக்கு நல்ல கல்வி, பயிற்சி மற்றும் திறமையை உறுதி செய்ய வேண்டும்” என சுனில் மிட்டல் குறிப்பிட்டார். இந்த விவாதத்தில் அடுத்த 5-10 ஆண்டுகளில் இந்தியாவின் பாதை குறித்து அனைத்து பேச்சாளர்களும் பேசினர்.

***

AP/CR/DL



(Release ID: 1927759) Visitor Counter : 184