பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிட்னியில் வர்த்தக வட்டமேசை மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

Posted On: 24 MAY 2023 3:28PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சிட்னியில் ஆஸ்திரேலிய முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் வர்த்தக வட்டமேசை மாநாட்டில் உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைமைச் செயல் அதிகாரிகள், எஃகு, வங்கி, எரிசக்தி, சுரங்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாவார்கள். ஆஸ்திரேலியாவின் சில முன்னணி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றனர்.

எளிதாக வணிகம் செய்வதற்கும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், இந்தியாவில் அரசு தொடங்கியுள்ள ஏராளமான பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை பிரதமர் அப்போது எடுத்துரைத்தார். இதில், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கான பிரதமரின் விரைவு சக்தித் திட்டம், ஜன் தன் - ஆதார் - மொபைல், தேசிய கல்விக் கொள்கை; ஹைட்ரஜன் இயக்கம் 2050, உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம், விண்வெளி மற்றும் புவியியல் துறையில் தனியார் முதலீட்டை அதிகரிப்புது, மருத்துவ சாதனங்கள் உற்பத்திக்கான புதிய கொள்கை, ஆயுஷ்மான் பாரத் உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் போன்றவை குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், நிதித்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, செமிகண்டக்டர்கள், விண்வெளி, பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி, மருந்து, சுகாதாரம், மருத்துவ சாதனங்கள் உற்பத்தி, சுரங்கம், உள்கட்டமைப்பு, முக்கிய கனிமங்கள், ஜவுளி, விவசாயம் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் போன்றவற்றில் இந்தியாவில் உள்ள  முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

தலைமைச் செயல் அதிகாரிகளை அவர்களது இந்தியக் கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டு செயல் திட்டங்களை உருவாக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற தலைமைச் செயல் அதிகாரிகள் பின்வருமாறு:

1

வரிசை எண்:

 நிறுவனம்

அதிகாரி

1

ஆஸ்திரேலியா காமன் வெல்த் வங்கி

திரு மேட் கோமின்

தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி

2

ரியோ டிண்டோ

கெல்லி பார்க்கர், தலைமைச் செயல் அதிகாரி

3

ஆஸ்திரேலிய தேசிய வங்கி

பிலிப் கிரானிக்கன், தலைவர் மற்றும் செயல்பாடு சாராத இயக்குநர்

4

ஆஸ்திரேலிய தொழில் வங்கி

இன்னஸ் வில்லக்ஸ், தலைமைச் செயல் அதிகாரி

5

பிஹெச்பி

ஜெரால்டின் ஸ்லாட்டரி, ஆஸ்திரேலிய தலைவர்

6

அட்லாஸியன்

ஸ்காட் பிராக்வர், இணைத் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர்

7

சிட்னி பல்கலைக்கழகம்

பேராசிரியர் மார்க் ஸ்கார்ட், துணைவேந்தர் மற்றும் தலைவர்

8

ஓரிக்கா

சஞ்சீவ் காந்தி, மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி

9

கோக்லியார்

டிக் ஹோவிட், தலைவர்

10

ஆஸ்திரேலிய வர்த்தக கவுன்சில்

ஜெனீபர் வெஸ்டா கோட், தலைமைச் செயல் அதிகாரி

11

வைஸ்டெக்

ரிச்சர்டு ஒயிட், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிறுவனர்

12

ஏர்ட்ரங்

ராபின் கூடா, நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி

13

எண்டூரா

டாமி சூ, மேலாண்மை இயக்குநர்

14

குயிண்டிஸ் சாண்டல்வுட்

ரிச்சர்டு ஹென்பிரே, தலைமைச் செயல் அதிகாரி

15

யுஎன்எஸ்டபிள்யு

பேராசிரியர் அட்டீலா பிராங்க்ஸ், துணைவேந்தர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி

16

ரீச்சார்ஜ் இண்டஸ்ட்ரீஸ்

ராபர்ட் ஃபிட்ஸ் பேட்ரிக், தலைமைச் செயல் அதிகாரி

17

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்

கேத்தரீனா ஜாக்சன், தலைமைச் செயல் அதிகாரி

18

இந்திய- ஆஸ்திரேலிய மையம்

ஸ்வாதி தவே, ஆலோசனைக்குழுத் தலைவர்

19

நவிட்டாஸ் குழுமம்

ஸ்காட் ஜோன்ஸ், தலைமைச் செயல் அதிகாரி

******

(Release ID: 1926895)

AP/PLM/RS/KRS


(Release ID: 1926998) Visitor Counter : 134