பிரதமர் அலுவலகம்
இந்திய பசிபிக் தீவுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் மூன்றாவது மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்கவுரையின் தமிழாக்கம்
Posted On:
22 MAY 2023 12:58PM by PIB Chennai
மேன்மையாளர்களே,
இந்திய பசிபிக் தீவுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் மூன்றாவது மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் மனமார வரவேற்கிறேன். இந்த மாநாட்டில் என்னுடன் பிரதமர் ஜேம்ஸ் மரப்பே இணைந்து தலைமை தாங்குவது எனக்கு மகிழ்சியளிக்கிறது. போர்ட் மோர்ஸ்பையில் மாநாட்டிற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அவரையும், அவரது குழுவினரையும், வாழ்த்த விரும்புகிறேன்.
மேன்மையாளர்களே,
இம்முறை நீண்ட நாட்களுக்கு பிறகு நாம் சந்திக்கிறோம். இதற்கிடையே, கொவிட் பெருந்தொற்று மற்றும் பல்வேறு இதர சவால்களுடன் கடினமான தருணத்தை உலகம் எதிர்கொண்டது. இந்த சவால்களின் தாக்கம், பெரும்பாலும் உலகின் தென்பகுதி நாடுகளில் உணரப்பட்டது.
பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர்கள், பசி, ஏழ்மை மற்றும் பல்வேறு உடல் சுகாதாரம் தொடர்பான சவால்கள் ஏற்கனவே பரவலாக உள்ளது. தற்போது புதிய விவகாரங்கள் உருவெடுத்து வருகிறது. உணவு, எரிபொருள், உரம், மருந்து ஆகியவற்றின் விநியோகத்தின் தடைகள் உருவாகி வருகிறது.
நம்பிக்கையானவர்கள் என்று நாம் கருதியவர்கள், தேவையான தருணத்தில் நமக்கு ஆதரவாக இல்லை. இந்த சவாலான தருணத்தின் போது, பழைய பழமொழி உண்மையானது: “ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்”.
இந்தக் கடினமான தருணத்தின் போது, பசிபிக் தீவுகள் நட்பு நாடுகளுடன் இந்தியா, உறுதுணையாக இருந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தடுப்பூசிகள் அல்லது அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், கோதுமை அல்லது சர்க்கரை ஆகிய எந்த தேவையோ, அனைத்து கூட்டாண்மை நாடுகளுக்கும் இந்தியா அதனை வழங்கியது.
மேன்மையானவர்களே,
நான் முன்பே கூறியது போல், என்னைப் பொறுத்தவரை, நீங்கள் சிறிய தீவு நாடுகள் இல்லை, பெரிய கடல் பகுதியின் நாடுகள். இந்த விரிவான கடல் பகுதிதான் இந்தியாவை உங்கள் அனைவருடனும் இணைக்கிறது. உலகை எப்போதும் ஒரே குடும்பமாகப் பார்ப்பது இந்திய தத்துவமாகும்.
நடப்பாண்டு, ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருளானது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பது இந்த சிந்தனையின் அடிப்படையிலானது.
நடப்பாண்டு ஜனவரியில், உலகத் தெற்கு நாடுகளின் குரல் மாநாட்டை நாங்கள் ஏற்பாடு செய்தோம், அதில் உங்கள் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர். அதற்காக உங்களை வாழ்த்துகிறேன். ஜி20 தளத்தின் மூலம் உலகளாவிய தெற்கு நாடுகளின் பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை உலகின் கவனத்திற்குக் கொண்டுவருவது ஒரு பொறுப்பாக இந்தியா கருதுகிறது.
மேன்மையாளர்களே,
கடந்த இரண்டு நாட்களில் ஜி-7 மாநாட்டிலும், அதே முயற்சியை நான் மேற்கொண்டேன். அங்கு பசிபிக் தீவு கூட்டமைப்பில் பங்கேற்ற மேன்மைதாங்கியே மார்க் பிரவுன் அதற்கு சான்றளிக்க முடியும்.
மேன்மையானவர்களே,
பருவ நிலை மாற்ற விவகாரத்தில் இந்தியா, லட்சியமான இலக்குகளை கொண்டுள்ளது. அதையொட்டி, நாங்கள் விரைவாக பணியாற்றி வருகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். கடந்த வருடம், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை இயக்கத்தை ஐநா பொதுச்செயலாளருடன் இணைந்து நான் தொடங்கினேன். இந்த இயக்கத்தில் நீங்கள் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு, சிடிஆர்ஐ போன்ற முன்னெடுப்புகளை இந்தியா, மேற்கொண்டுள்ளது. உங்களில் பெரும்பான்மையானோர், ஏற்கனவே சூரிய கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதை நான் புரிந்துள்ளேன். சிடிஆர்ஐ திட்டங்களின் பயன்களை நீங்கள் அறிவீர்கள் என்பதை நான் நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியில், நீங்கள் அனைவரும், இந்த முன்னெடுப்புகளில் இணைய அழைப்பு விடுக்கிறேன்.
மேன்மையானவர்களே,
உணவுப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும்போது, ஊட்டச்சத்து மற்றும் சூற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தியிருக்கிறோம். 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ நா அறிவித்துள்ளது. இந்த சிறப்பான உணவுக்கு ‘ஸ்ரீ அன்னா’ என்ற தகுதியை இந்தியா அளித்துள்ளது.
அவைகள் சாகுபடிக்கு குறைவான தண்ணீரை ஈர்த்து அதிக ஊட்டசத்தை அளிக்கிறது. உங்கள் நாடுகளிலும் நீடித்த உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய சிறுதானியங்கள் சிறந்த பங்களிப்பை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.
மேன்மையானவர்களே,
உங்களுடைய முன்னுரிமைகளுக்கு இந்தியா, மதிப்பளிக்கிறது. உங்களுடைய வளர்ச்சிக்கான கூட்டாளியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மனித நேய உதவி அல்லது உங்களுக்கான வளர்ச்சி எவற்றிலும், உங்களுடைய நம்பத்தகுந்த கூட்டாளியாக இந்தியாவை கருத முடியும். மனித மதிப்பின் அடிப்படையில், நமது கண்ணோட்டங்கள் உள்ளன.
பலோ-வில் மாநாட்டு மையம்;
நவ்ரு-வில் கழிவு மேலாண்மைத் திட்டம்;
ஃபிஜியில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதைகள்;
கிரிபாத்தியில் சூரிய ஒளி திட்டம்
இவைகள் அனைத்தும் அதே உணர்வின் அடிப்படையிலானது
எங்களுடைய திறன்களையும், அனுபவங்களையும் எந்தவித தயக்கமும் இன்றி, உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மின்னணு தொழில் நுட்பம் அல்லது விண்வெளி தொழில்நுட்பம்;
சுகாதாரப் பாதுகாப்பு அல்லது உணவுப் பாதுகாப்பு; பருவநிலை மாற்றம் அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பு; அனைத்து வழிகளிலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
மேன்மையானவர்களே,
பன்முகத்தன்மையில் உள்ள உங்கள் நம்பிக்கையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். இலவச, திறந்த மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பகுதியை நாங்கள் ஆதரிக்கிறோம். அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம்.
ஐ.நா பாதுகாப்புச் சபையிலும் உலகின் தெற்கு நாடுகளின் குரல் வலுவாக ஒலிக்க வேண்டும். இதற்காக, சர்வதேச நிறுவனங்களின் சீர்திருத்தம், நம்முடைய பகிர்ந்து கொள்ளப்படும் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
குவாட் -இன் ஒரு பகுதியாக ஹிரோஷிமாவில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் நான் விவாதித்தேன். இந்த விவாதம், இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்தவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. குவாட் கூட்டத்தில், பலாவ்வில் ரேடியோ அணுகல் கட்டமைப்பை (RAN) நிறுவ முடிவு செய்துள்ளோம். பலதரப்பு அமைப்பில், பசிபிக் தீவு நாடுகளுடன் கூட்டுறவை மேம்படுத்துவோம்.
மேன்மையானவர்களே,
ஃபிஜியில் தெற்கு பசிபிக் பல்கலைக்கழகத்தில், நீடித்த கடலோர மற்றும் கடல் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மையம், பசிபிக் தீவு நாடுகளில் தொலைநோக்குப் பார்வையுடன் நீடித்த வளர்ச்சியில் இந்தியாவின் அனுபவத்தை இணைக்கிறது.
கூடுதலாக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்வதில், இது மதிப்பு வாய்ந்ததாக அமையும். 14 நாடுகளின் மூலம், குடிமக்களின் நலன், வளர்ச்சி, செழுமை ஆகியவற்றுக்காக நீடித்த கடலோர மற்றும் கடல் ஆராய்ச்சி மையம் இன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அதேபோல், தேசிய மற்றும் மனித வளர்ச்சிக்காக விண்வெளி தொழில்நுட்பத்திற்கான, இணையதளம் தொடங்கப்படுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம், இந்திய செயற்கைக்கோள் கட்டமைப்பில் இருந்து உங்கள் நாட்டின், தொலையுணர்வு தரவுகளை நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ள இயலும்.
மேன்மையானவர்களே,
தற்போது, உங்கள் எண்ணங்களை அறிய நான் விரும்புகிறேன். இன்றைய மாநாட்டில் பங்கேற்றதற்காக உங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்கிறேன்.
--------------
(Release ID: 1926239)
AD/IR/RS/KRS
(Release ID: 1926318)
Visitor Counter : 160
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam