பிரதமர் அலுவலகம்
பிரேசில் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
21 MAY 2023 9:29AM by PIB Chennai
2023 மே 21 அன்று ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டிற்கிடையே மேன்மை தங்கிய பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.
இரு தலைவர்கள் இடையேயான முதல் சந்திப்பாக இது இருந்தது. தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 75வது ஆண்டாக இந்த ஆண்டு உள்ளது என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். உத்திகள் வகுத்தலில், குறிப்பாக பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி, வர்த்தகம், மருந்துகள் உற்பத்தி, வேளாண்மை, பால்வளம் & கால்நடை பராமரிப்பு, உயிரி-எரிபொருள் & தூய்மை எரிசக்தி பற்றி ஆய்வுசெய்த அவர்கள், அதனை மேலும் ஆழப்படுத்துவதற்கான வழிகள் பற்றியும் விவாதித்தனர். இரு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்களின் உயர்நிலைக் கூட்டத்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். பிராந்திய வளர்ச்சி குறித்தும் இரு தலைவர்களும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர். பன்னாட்டு அமைப்புகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை, பன்னாட்டு அமைப்புகளில் நீடிக்கும் சீர்திருத்தத்தின் அவசியத்தையும் இவர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆண்டு செப்டம்பரில் ஜி-20 உச்சிமாநாட்டிற்காக அதிபர் லூலாவை இந்தியாவில் வரவேற்க பிரதமர் எதிர்நோக்கி இருக்கிறார்.
*****
AD/SMB/DL
(रिलीज़ आईडी: 1926060)
आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam