உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா குஜராத் மாநிலம் துவாரகாவில் ரூ. 470 கோடி செலவில் கட்டப்படவுள்ள தேசிய கடலோர காவல் துறையின் (என்ஏசிபி) நிரந்தர வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்

Posted On: 20 MAY 2023 6:39PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் கடலோரப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த 450 ஏக்கர் நிலப்பரப்பில் தேசிய கடலோரக் காவல் அகாடமியின் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக திரு அமித் ஷா கூறினார்.

 

நரேந்திர மோடி பிரதமரான பிறகு  நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு  குடிமக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்

 

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் எல்லைக் காவலர்களின் வாழ்க்கை மற்றும் பணி வசதிகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் குடும்பங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதற்கும் நாட்டின் பாதுகாப்பிற்காக அதிநவீன உபகரணங்களை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 

முந்தைய அரசில் கடலோரப் பாதுகாப்புக்கான பயிற்சிக் கொள்கை எதுவும் இல்லை. 2018-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய கடலோரக் காவல் அகாடமிக்கு ஒப்புதல் அளித்தார். திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் உறுதியால் நாட்டின் கடலோரப் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான பணி இன்று நடைபெறுகிறது.

 

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்திய கடற்படை, இந்திய கடலோரக் காவல்படை, கடற்படை போலீஸ், சுங்கம் மற்றும் மீனவர்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வளையத்தின் சுதர்சன சக்கரத்தை உருவாக்கியுள்ளது.

 

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒருங்கிணைந்த யோசனையுடன் உருவாக்கப்பட்ட இந்த உத்தியின் மூலம் நாட்டின் கடற்கரைகளை  பாதுகாத்துள்ளது.

 

சமீபத்தில் இந்திய கடற்படை மற்றும் என்சிபி ஆகியவை இந்திய உளவுத்துறையின் உதவியுடன் கேரள கடற்கரையிலிருந்து 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களைக் கைப்பற்றியது.

 

முந்தைய அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் ரூ. 680 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் தற்போது இந்திய பாதுகாப்பு முகமைகள் ஒரே நேரத்தில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளன. இது நமது ஏஜென்சிகள் எவ்வளவு விரைவாக செயல்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.

 

எந்த நாட்டில் எல்லைகள் பாதுகாப்பாக இல்லையோ அந்த நாட்டில் வளர்ச்சி சாத்தியமில்லை. எந்த நாட்டில் தெளிவான நேர்த்தியான எல்லை பாதுகாப்பு இருக்கிறதோ  அந்த நாடு மட்டுமே பாதுகாப்பாக இருக்க முடியும்.

 

 

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு துறை அமைச்சருமான திரு அமித் ஷா குஜராத் மாநிலம் துவாரகாவில் ரூ. 470 கோடி செலவில் அமையவுள்ள தேசிய கடலோர காவல் துறையின் (என்ஏசிபி) நிரந்தர வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். மத்திய உள்துறை செயலாளர், எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் உட்பட பல உயரதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

திரு அமித் ஷா தனது உரையில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில், கடலோரப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் 450 ஏக்கர் நிலப்பரப்பில் தேசிய கடலோரக் காவல் அகாடமியின் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் எல்லைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டின் குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த, நமது எல்லைக் காவலர்களின் வாழ்க்கை மற்றும் பணி வசதிகள் மேம்படுவதும், அதிநவீன உபகரணங்களைப் பெறுவதும், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதும் அவசியம் என்று திரு ஷா கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த மூன்று பகுதிகளிலும் கவனம் செலுத்துகிறது. நமது பாதுகாப்புப் படையினருக்கு அனைத்து விதமான வசதிகள் மற்றும் அதிநவீன உபகரணங்களை வழங்க முயற்சித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

 

 சமீபத்தில் இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பணியகம் (NCB), இந்தியாவின் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் கேரளா கடற்கரையில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களைக் கைப்பற்றியது. அதேசமயம் முந்தைய அரசாங்கத்தின் 10 ஆண்டு கால ஆட்சியில் 680 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது ஆனால் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் ஒரே சரக்கில் 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை இப்போது பறிமுதல் செய்துள்ளன இது நமது ஏஜென்சிகளின் தயார்நிலையைக் காட்டுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

திரு அமித் ஷா, இன்று தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான பிபின் சந்திரபாலின் நினைவு தினம் என்று கூறினார். இன்று பரம் வீர் சக்ரா விருது பெற்ற தியாகி பிரு சிங்கின் பிறந்தநாள். அவர் மகத்தான துணிச்சலை வெளிப்படுத்தி தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டைப் பாதுகாத்தவர். அந்தமான் மற்றும் நிக்கோபாரில் உள்ள ஒரு தீவுக்கு தியாகியின் நினைவாக ஷஹீத் பிரு சிங் தீவு என்று பிரதமர் திரு நரேந்திர மோடி பெயரிட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

 

ஒரு நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால், வளர்ச்சிக்கு அர்த்தம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். ஒரு நாடு தனது எல்லைகளை கவனமாகப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர் கூறினார். இந்தியா 15,000 கிமீ நீள எல்லையையும், 7,516 கிமீ நீள கடல் எல்லையையும் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் அமித் ஷா கூறினார். 7,516 கிலோமீட்டர் நீளமுள்ள கடல் எல்லையில், 5,422 கிலோமீட்டர் நிலப்பரப்பு எல்லையாகவும், 2,000 கிமீக்கு மேல் தீவுகளின் எல்லையாகவும் உள்ளது என்றார். 1,382 தீவுகள், 3,337 கடலோர கிராமங்கள், 11 பெரிய துறைமுகங்கள், 241 சிறிய மற்றும் விண்வெளி, பாதுகாப்பு, அணுசக்தி, பெட்ரோலியம், கப்பல் போன்றவற்றை உள்ளடக்கியதாக 135 நிறுவனங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

 

முன்பு இந்த பாதுகாப்புப் பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்புப் பயிற்சி முறை இல்லை. ஆனால் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஒவ்வொரு கடலோர காவல் நிலையத்திலும் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடலோர காவல்படையிலும் வீரர்களின் தேவை உணரப்பட்டது. கடலோரப் பாதுகாப்பிற்கான பயிற்சியை திட்டமிட்ட முறையில் ஏற்பாடு செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று ஸ்ரீ அமித் ஷா கூறினார். 2018 ஆம் ஆண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, தேசிய கடலோரக் காவல் அகாடமிக்கு ஒப்புதல் அளித்ததாகவும் அதை ஸ்ரீ கிருஷ்ணரின் நகரில் நிறுவ முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். நாட்டின் நுழைவாயில் துவாரகா என்று கூறினார். ஸ்ரீ கிருஷ்ணர் மதுராவிலிருந்து இந்த இடத்திற்கு வந்து நமது கடல் எல்லையில் ஒரு பெரிய வணிக மையத்தை நாட்டினார். இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடியின் சிந்தனையால் ஒட்டுமொத்த தேசத்தின் கடலோரப் பாதுகாப்பிற்கான பயிற்சி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பூமியில் வழங்கப்படுகிறது.

 

நாடு முழுவதிலும் உள்ள கடலோரக் காவல் படையினரின் எண்ணிக்கை சுமார் 12,000 பேர் என்றும், இந்த அகாடமி முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தபின் ஓராண்டில் 3,000 பேருக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமித் ஷா கூறினார். இதன் மூலம் 4 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் 100% பயிற்சி வழங்க முடியும். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் உறுதியின் காரணமாக கடலோரப் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான பணி இன்று தொடங்கப்படுகிறது என்றார்.

 

சுமார் 56 கோடி செலவில் 5 வெவ்வேறு எல்லை பாதுகாப்பு படை(BSF)  புறக்காவல் நிலையங்கள் மற்றும் 18வது படையின் ஒரு கண்காணிப்பு கோபுரம் இன்று திறந்து வைக்கப்பட்டது. எல்லையில் இருக்கும் நமது விழிப்புணர்வு மிக்க காவலர்களுக்கு இது வசதியாக இருக்கும்  என்றும் மத்திய உள்துறை  அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு எல்லையில் எல்லை பாதுகாப்பு படை  நிறுத்தப்பட்டுள்ளதால், நாட்டு மக்கள் நிம்மதியாக உறங்குவதாகவும் நாடு பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

எல்லை பாதுகாப்பு படை (BSF) புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது என்றும், ரத்தம் சிந்தி நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்திற்கும் BSF வீரர்கள் துணிச்சலுடன் பாதுகாத்துள்ளனர். என்றும் திரு அமித்ஷா கூறினார். போரின் போது பல சந்தர்ப்பங்களில் ராணுவத்துடன் தோளோடு தோள் சேர்ந்து எல்லைப் பாதுகாப்பு படை போராடி உள்ளது. இந்த வீரக் கதை நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும் என்று திரு அமித் ஷா கூறினார்.

 

இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, கடற்படை போலீஸ், சுங்கம் மற்றும் மீனவர்களை இந்தியாவின் முழுமையான சுதர்சன சக்ரா பாதுகாப்பு வளையமாக மாற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடல்சார் பாதுகாப்பு கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார்.  கடலில் இந்திய கடற்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்றார். மத்திய கடலில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எல்லை பாதுகாப்பு படையின் தண்ணீர் பிரிவின் கடல் பகுதி பாதுகாப்பு கையாளப்படுகிறது.

 

அதேசமயம் கிராமத்தில் தேசபக்தியுள்ள மீனவர்கள் தகவல்களை  வழங்கி நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்கிறார்கள். இந்த அனைத்து பரிமாணங்களிலும் இந்திய அரசு நன்கு ஒருங்கிணைந்த கடலோர பாதுகாப்புக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் நாட்டின் கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்க பாடுபடுகிறது என்று திரு அமித்ஷா கூறினார்.  கடலோர பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதால் நமது நாடு பல விளைவுகளை சந்தித்துள்ளது. 2008 மும்பை தாக்குதலில் 166 அப்பாவி உயிர்கள் ஒரு சிறு தவறு காரணமாக பலியாகியதை தேசபக்தியுள்ள எந்த குடிமகனும் மறக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உருவாக்கிய கடலோரப் பாதுகாப்புக் கொள்கைக்குப் பிறகு, எதிரிகள் இதுபோன்ற சம்பவங்களைச் செய்ய முயன்றால் தகுந்த பதில் கிடைக்கும் என்றார். இதற்கு இந்தப் பயிற்சி மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் கூறினார்.

 

இந்த கடலோர பாதுகாப்பு கொள்கை பல தூண்களை அடிப்படையாகக் கொண்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். கடலோர பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை விஷயத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் ரோந்து நெறிமுறைகளை அமைப்பதன் மூலம் கடலோர கூட்டு ரோந்து, மீனவர்களின் பாதுகாப்பு, மீனவர்களுக்கு  டிஜிட்டல் குறியீடுகள்,  ஆதார் அட்டைகளை வழங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்தல், நீல பொருளாதாரத்திற்காக கட்டப்பட்ட அனைத்து மீன்பிடி துறைமுகங்களிலும் முன்னணி பாதுகாப்பு இவற்றையெல்லாம் சேர்த்து கடலோரப் பாதுகாப்பிற்கான அசைக்க முடியாத கோட்டையை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிறுவியுள்ளது என்றார்.

 

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் போர்பந்தர் சிறையை ஒரு அறிவிப்பை வெளியிட்டு மூட வேண்டியிருந்தது என்றும், போர்பந்தர் அனைத்து வகையான திருட்டுகளுக்கும் மையமாக மாறி இருந்தது என்றும் திரு அமித் ஷா கூறினார். நரேந்திர மோடி தலைமையிலான அரசு வந்த பின் மீண்டும் சிறை திறக்கப்பட்டது . திருடர்கள் இங்கிருந்து ஓடிவிட்டனர் என்றார். கட்ச், சர் க்ரீக், ஹரமினாலா அல்லது போர்பந்தரின் கடல் கரையோ அல்லது துவாரகா-ஓகா-ஜாம்நகர்-சாலாயாவின் கடல் கரையோ ஏதுவாக இருந்தாலும் குஜராத்தை திரு நரேந்திர மோடி பாதுகாத்தார் என்று அவர் கூறினார். இன்று அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிணைத்து, நாட்டின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி நாட்டின் கடற்கரையை பாதுகாக்கும் வகையில் இந்த பயிற்சி அகாடமியை இங்கு நிறுவியுள்ளதாக திரு ஷா கூறினார்.

***

AD/CJL/DL



(Release ID: 1925968) Visitor Counter : 202