பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹெச்.பி.சி.எல் நிறுவனத்தின் மும்பை மற்றும் விசாகப்பட்டினம் சுத்திகரிப்பு ஆலைகளின் சிறந்த செயல்பாட்டிற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 16 MAY 2023 9:40AM by PIB Chennai

ஹெச்.பி.சி.எல் நிறுவனத்தின் மும்பை மற்றும் விசாகப்பட்டினம் சுத்திகரிப்பு ஆலைகளின் சிறந்த செயல்பாட்டிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஹெச்.பி.சி.எல் நிறுவனம், நம் நாட்டு மக்களுக்கு மலிவான விலையில் எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்திருப்பது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தொடர் ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்திருந்தார்.

ஹெச்.பி.சி.எல் நிறுவனத்தின் மும்பை மற்றும் விசாகப்பட்டினம் சுத்திகரிப்பு ஆலைகள், 2023 ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் 4.96 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அதிகபட்ச காலாண்டு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் 113% திறனில் இயங்கின.

மத்திய அமைச்சரின் தொடர் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது:

“எரிசக்தி துறைக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி.”

******

(Release ID: 1924359)

SMB/RB/KRS


(रिलीज़ आईडी: 1924442) आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam