பிரதமர் அலுவலகம்

நாட்டில் வானொலித் தொடர்பை அதிகப்படுத்தும் முயற்சியாக ஏப்ரல் 28 அன்று, 91 பண்பலை டிரான்ஸ்மிட்டர்களைப் பிரதமர் தொடங்கிவைக்கவிருக்கிறார்

டிரான்ஸ்மிட்டர்கள் பரவலாக 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இருக்கும்

முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் எல்லைப்பகுதிகளின் தொடர்பை விரிவாக்குவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்

சுமார் 35,000 சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு ஒலிபரப்பு அதிகரிக்கப்படுவதால் கூடுதலாக 2 கோடி மக்கள் இப்போது பயனடைவார்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க மனதின் குரல் நிகழ்வின்
100-வது அத்தியாயத்திற்கு 2 நாள் முன்னதாக இந்த விரிவாக்கம் செயல்பாட்டுக்கு வருகிறது

Posted On: 27 APR 2023 12:51PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி ஏப்ரல் 28 அன்று, காலை 10.30 மணிக்கு காணொலிக்காட்சி மூலம் 91 பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை தொடங்கிவைக்கவிருக்கிறார். இந்தத் தொடக்கம் நாட்டில் வானொலித் தொடர்பை மேலும் அதிகரிக்கும்.

நாட்டில் பண்பலை வானொலித் தொடர்பை விரிவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 84 மாவட்டங்களில் இந்த 91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.  முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் எல்லைப்பகுதிகளின் தொடர்பை விரிவாக்குவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.  பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்குவங்கம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஆந்திரப்பிரதேசம், கேரளா, தெலங்கானா, சத்திஷ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, லடாக், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இவற்றுள் அடங்கும்.  இந்த விரிவாக்கத்தின் மூலம் அகில இந்திய வானொலியின் பண்பலைச் சேவை இதுவரை கிடைக்கப்பெறாத 2 கோடி மக்கள் இப்போது பயனடைவார்கள். சுமார் 35,000 சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு ஒலிபரப்பு விரிவாக்கம் பெறும்.

பொதுமக்களை சென்றடைவதில் வானொலி முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதில் பிரதமர் உறுதியான நம்பிக்கைக் கொண்டுள்ளார். இந்த ஊடகத்தின் தனித்துவ வலிமையைப் பயன்படுத்தி மிகவும் பரவலாக மக்களை அடைவதற்கு பிரதமர் தொடங்கிய மனதின் குரல் நிகழ்வு இப்போது குறிப்பிடத்தக்க வகையில் 100-வது அத்தியாயத்தை நெருங்குகிறது.

***

 

(Release ID: 1920150)

AP/SMB/RJ/KRS



(Release ID: 1920198) Visitor Counter : 138