பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சௌராஷ்டிரா தமிழ் சங்கம நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் ஏப்ரல் 26 அன்று உரையாற்றுகிறார்

Posted On: 25 APR 2023 7:53PM by PIB Chennai

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவுநாள் நிகழ்ச்சியில் நாளை
(26 ஏப்ரல் 2023) காலை 10.30 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி மெய்நிகர் முறையில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற முன் முயற்சியின் அடிப்படையில் நாட்டின் இரு வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களிடையேயான நீண்ட நெடிய தொடர்புகளை  புதுப்பிக்கும் வகையில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் காரணமாக இந்த சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதே கண்ணோட்டத்தில் முன்னதாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. குஜராத்திற்கும், தமிழகத்திற்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்படும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய தொடர்புகளை முன்னெடுத்துச்செல்லும் வகையில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.  நூற்றாண்டுகள் முன்னதாக ஏராளமான மக்கள் சௌராஷ்ரா பிராந்தியத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு புலம்பெயர்ந்தனர். இந்த சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தமிழகத்தில் வாழும் சௌராஷ்டிரா மக்களுக்கு தங்களது வேர்களான குஜராத் பகுதிகளுடன் மற்றும் அப்பிராந்திய மக்களுடன் தொடர்பை புதுப்பித்துக்கொள்ள வழிவகுத்தது. இந்த 10 நாள் நிகழ்வில் 3000 மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சௌராஷ்டிரா மக்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சோம்நாத்துக்கு வந்து சென்றனர். இம்மாதம் 17-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி நாளை 26-ம் தேதி சோம்நாத்தில் நிறைவடைகிறது.

***

(Release ID: 1919593)

SM/AG/KRS


(Release ID: 1919605) Visitor Counter : 160