சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய கொவிட்-19 தடுப்பூசி திட்டம், புத்தாக்கத்திற்கான பொது நிர்வாகத்துறையில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதை 2022 பெறுகிறது

Posted On: 21 APR 2023 4:44PM by PIB Chennai

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய கொவிட்-19 தடுப்பூசி திட்டம், புத்தாக்கத்திற்கான பிரிவில் பொது நிர்வாகத்துறையில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதை 2022 பெறுகிறது. இன்று விஞ்ஞான் பவனில் 16-வது குடிமைப்பணி சேவைகள் தினத்தையொட்டி நடைபெற்ற  விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியிடமிருந்து  விருதை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் செயலர் திரு ராஜேஷ் பூஷன் பெற்றுக்கொண்டார்.

மத்திய  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்  டாக்டர் மன்சுக் மாண்டவியா இந்த சாதனைக்காக நம் நாட்டிற்கு  வாழ்த்துக்களை தெரிவித்து, இதில் தொடர்புடைய அனைத்து சுகாதார பணியாளர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சமூக அமைப்பைச் சேர்ந்த நபர்கள் ஓய்வின்றி செயல்பட்டு இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை வெற்றியடைய செய்ததற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

“அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் இருக்க வேண்டும்” என்ற நோக்கில் செயல்பட்ட ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள் என்றார்.

***

SM/GS/AG/KRS


(Release ID: 1918630)