பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 13 APR 2023 10:55PM by PIB Chennai

வணக்கம்!

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! என்னுடைய தமிழ் சகோதர சகோதரிகளின் அன்பு மற்றும் பாசத்தால் உங்களுடன் தமிழ் புத்தாண்டை இன்று கொண்டாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது. புத்தாண்டு என்பது பண்டைய பாரம்பரியத்தில் நவீனத்துவத்தின் திருவிழா. இத்தகைய பழமையான தமிழ்க் கலாச்சாரம், ஒவ்வொரு ஆண்டும் புதிய ஆற்றலுடன் முன்னேறி வருகிறது. இது உண்மையிலேயே  குறிப்பிடத்தக்கது.

 தமிழ் மக்கள் மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவத்தை வலியுறுத்திய பிரதமர், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தமது ஈர்ப்பையும் உணர்வுப்பூர்வமான பற்றையும் வெளிப்படுத்தினார். குஜராத்தில் உள்ள தமது பழைய சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மக்கள் அதிக அளவில் இருப்பதையும்அவர்களது அளப்பரிய அன்பையும் நினைவுகூர்ந்த பிரதமர், தமிழ் மக்கள் தம்மீது கொண்டுள்ள அன்புக்கு நன்றி தெரிவித்தார். ஒருவருடைய பாரம்பரியத்தில் பெருமை - பழமையான கலாச்சாரம் காலத்தால் முற்பட்டது.  நான் குஜராத்தில் இருந்த போது, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மணிநகர் தொகுதியில் ஏராளமான தமிழ் வம்சாவழியினர் வாழ்ந்தனர். அவர்கள் எனக்கு வாக்களித்து சட்டப்பேரவை உறுப்பினராக ஆக்கியதுடன் முதலமைச்சராகவும் ஆக்கினார்.

நண்பர்களே!

உலகத்தைப் போலவே தமிழ்ப் பண்பாடும், மக்களும் உன்னதமானது. சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையிலிருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலத்திலிருந்து சிங்கப்பூர் வரை; தமிழ் மக்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை அவர்களுடன் எடுத்துச் செல்வதை நீங்கள் காண்பீர்கள்.  பொங்கலாக இருந்தாலும் சரி, புத்தாண்டாக இருந்தாலும் சரி, அவை உலகம் முழுவதையும் ஈர்த்துள்ளனஉலகின் பழமையான மொழி தமிழ். இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம். தமிழ் இலக்கியமும் பரவலாக மதிக்கப்படுகிறது. தமிழ்த் திரையுலகம் பல அடையாளப் படைப்புகளை நமக்குக் கொடுத்திருக்கிறது.

நண்பர்களே!

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் வளர்ச்சியில் தமிழ் மக்களின் பங்களிப்பு முக்கியமாகும். சி.ராஜகோபாலாச்சாரி, கே.காமராஜ், டாக்டர் அப்துல் கலாம் போன்றவர்களை குறிப்பிடாமல் நாம் நவீன இந்தியா குறித்து பேசுவது முழுமையடையாது. மருத்துவம், சட்டம், கல்வித் துறைகளில் தமிழர்களின் பங்களிப்பு ஒப்பிட முடியாதது.

நண்பர்களே!

உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடு இந்தியாவாகும். தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய ஆதாரங்கள் உட்பட அதற்கு மறுக்க முடியாத சான்றுகள் உள்ளன. உத்திரமேரூரில் உள்ள 11-12 நூற்றாண்டுகள் பழமையான கல்வெட்டு பண்டைய காலங்களிலிருந்து ஜனநாயக நெறிமுறைகளையும் நடைமுறைகளையும் விவரிக்கிறது. இந்தியாவை ஒரு தேசமாக வடிவமைத்த தமிழ் கலாச்சாரத்தில் நிறைய விஷயங்கள் நிறைந்துள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில், சதுரங்க வல்லபநாதர் கோயில் ஆகியவற்றின் வளமான பண்டைய பாரம்பரியம் வியக்கத்தக்க அளவில் நவீனகாலத்துக்கும்  பொருத்தமானவை.

நண்பர்களே!

பல்வேறு தமிழ் கலாச்சாரம் இந்தியாவை ஒரு தேசமாக கட்டமைத்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றும் இந்த உணர்வு என்னுள் புதிய ஆற்றலை நிரப்புகிறது. அண்மையில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமத்தின் நிகழ்ச்சியில், பழமை, புதுமை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை ஒரே நேரத்தில் கொண்டாடியுள்ளோம். இந்தி பேசும் பிராந்தியத்தில், இந்த டிஜிட்டல் யுகத்தில், தமிழ் புத்தகங்கள் இப்படி விரும்பப்படுகின்றன, இது நமது கலாச்சாரத் தொடர்பைக் காட்டுகிறது. தமிழ் மக்கள் இல்லாமல் காசிவாசிகளின் வாழ்க்கை முழுமையடையாது, நான் காசி வாசியாகிவிட்டேன், காசி இல்லாமல் தமிழ் மக்களின் வாழ்க்கையும் முழுமையடையாது. சுப்பிரமணிய பாரதியின் பெயரில் புதிய இருக்கையும், காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையில் தமிழர் ஒருவருக்கு இடமும்  வழங்கப்பட்டுள்ளது.

நண்பர்களே!

இந்தியாவின் முன்முயற்சியால் இன்று உலகம் முழுவதும் நமது ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிறுதானியங்கள் பாரம்பரியத்துடன் இணைந்துள்ளது.  மீண்டும் ஒருமுறை உணவுத் தட்டில் சிறுதானியங்களுக்கு இடம் கொடுத்து மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் உறுதி எடுக்க வேண்டும். தமிழ் கலை வடிவங்களை இளைஞர்கள் மத்தியில் ஊக்குவித்தல் மற்றும் அவற்றை உலகளவில் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். இன்றைய இளம் தலைமுறையினரிடையே  பிரபலமாக இருப்பவர்கள், அந்த அளவுக்கு அதிகமாக அடுத்த தலைமுறைக்கு இதனை எடுத்துச் செல்வார்கள். எனவே, இக்கலை குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது கூட்டுப் பொறுப்பாகும். சுதந்திர அமிர்த காலத்தில், நமது தமிழ் பாரம்பரியத்தை அறிந்து, அதை நாட்டுக்கும் உலகுக்கும் எடுத்துரைப்பது நமது பொறுப்பு. இந்த பாரம்பரியம் நமது ஒற்றுமை மற்றும் 'தேசம் முதலில்' என்ற உணர்வின் அடையாளமாகும். தமிழ் கலாச்சாரம், இலக்கியம், மொழி மற்றும் தமிழ் பாரம்பரியத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

***

(Release ID: 1916388)

AD/IR/RJ/KRS


(Release ID: 1917292) Visitor Counter : 199