நிதி அமைச்சகம்
பிரதமரின் காப்பீட்டு திட்டங்கள் குறித்து 3 மாத காலம் பிரச்சாரம் மேற்கொள்ள நிதிச் சேவைகள் துறை செயலர் தலைமையில் கூட்டம்
Posted On:
11 APR 2023 11:28AM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையின் செயலாளர், டாக்டர் விவேக் ஜோஷி, நிதி அமைச்சகத்தின் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் / மூத்த அதிகாரிகளுடன் நேற்று காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கிராம பஞ்சாயத்து அளவில் பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டம், பிரதமரின் விபத்து காப்பீடு திட்டம் உள்ளிட்ட காப்பீட்டு திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காப்பீடுகள் தொடர்பாக, 01.04.2023 முதல் 30.06.2023 வரையிலான 3 மாத கால பிரச்சாரம் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும்.
கூட்டத்தின் போது, மாநிலங்களில் உள்ள மக்கள்தொகையின் அளவைக் கருத்தில் கொண்டு இந்த காப்பீட்டு திட்டங்களை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தற்போது, பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் 8.3 கோடி காப்பீடுகளும், பிரதமரின் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் 23.9 கோடி காப்பீடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் கீழ் ரூ.15,500 கோடி உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சாரத்தை திறம்பட செயல்படுத்தி, கண்காணிக்கும் பணியை மேற்கொள்ள தலைமைச் செயலாளர்களின் ஒத்துழைப்பை டாக்டர் ஜோஷி கோரினார். இது தொடர்பாக அனைத்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடனும் வரும் 13-ந் தேதி ஒரு கூட்டத்திற்கு செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
***
AD/PKV/AG/RR
(Release ID: 1915533)
Visitor Counter : 198